செய்யாறு பகுதியை சேர்ந்த 6 விவசாயிகள் மீதான குண்டர் தடுப்பு சட்டம் ரத்து: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகாவில் 6 விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்டம், முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் ரத்து செய்யப்பட்டது.

இதுதொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டத்தில் 645 ஹெக்டேர், 2,300 ஹெக்டேர் பரப்பில் உள்ள 2 சிப்காட் தொழிற்பூங்காக்களில் 68 நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. நேரடியாக 59 ஆயிரம் பேர், மறைமுகமாக 1.75 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். சிப்காட்டை விரிவாக்க மக்கள் கோரிக்கை விடுத்ததால், மேல்மா உள்ளிட்ட 8 கிராமங்களில் 3,174 ஏக்கர் நிலஎடுப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் 7 ஏக்கர் மட்டுமே நஞ்சை நிலம் ஆகும்.

இந்நிலையில், மேல்மா கிராம பட்டா நிலத்தில். தேத்துறை கிராமத்தை சேர்ந்த மேல்மா சிப்காட் விவசாயிகள் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பச்சையப்பன் தலைமையில், கடந்த ஜூலை 2 முதல் தொடர் போராட்டம் நடத்தினர். சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், கடந்த நவ.4-ம் தேதி மேல்மா சிப்காட் விவசாயிகள் எதிர்ப்பு இயக்க நிர்வாகி கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த அருள் மற்றும் 19 பேர் கைது செய்யப்பட்டனர். ஏற்கெனவே அதிக வழக்குகளில் தொடர்புடைய அருள் மற்றும் 6 பேர் குண்டர் சட்டத்தின்கீழ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர்.

குண்டர் சட்டத்தில் கைதான பச்சையப்பன், தேவன், சோழன், திருமால், மாசிலாமணி, பாக்கியராஜ் ஆகிய 6 பேர்குடும்பத்தினர், செய்யாறு எம்எல்ஏ ஆகியோர், அமைச்சர் எ.வ.வேலுவை சந்தித்து, குண்டர் சட்டத்தை ரத்து செய்ய மனுஅளித்தனர். மனுக்களை பரிசீலித்த முதல்வர் ஸ்டாலின், மேற்கண்ட 6 பேரையும் குண்டர் சட்ட நடவடிக்கையில் இருந்து விடுவிக்க உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில், 6 பேர் மீது திருவண்ணாமலை ஆட்சியர் பிறப்பித்த குண்டர் சட்ட உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்