‘தளபதி விஜய் நூலகம்’ 11 இடங்களில் இன்று திறப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழகத்தில் 11 இடங்களில் ‘தளபதிவிஜய் நூலகம்’ திறக்கப்படுகிறது.

இதுதொடர்பாக அமைப்பின் பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் வெளியிட்டுள்ளஅறிவிப்பு: அமைப்பின் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தொண்டரணி சார்பில், தாம்பரம் தொகுதி பாலாஜி நகர் 3-வது தெரு, சிடிஓ காலனி, மேற்கு தாம்பரத்தில் நவ. 18-ம் தேதி (இன்று) காலை 10.30 மணிக்கு ‘தளபதி விஜய் நூலகம்’ திறக்கப்படுகிறது.

தொடர்ந்து, பல்லாவரம் தொகுதியில், தாம்பரம் மாநகராட்சி மும்மூர்த்தி நகர் 5-வது தெருவில் தொடங்கப்படுகிறது. இதேபோல, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 இடங்களிலும், அரியலூர், நாமக்கல் மேற்கு, சென்னை கிழக்கு, வடசென்னை கிழக்கு, வடசென்னை வடக்கு மற்றும் வேலூர் மாவட்டங்களில் தலா ஒன்று என மொத்தம்11 இடங்களில் இன்று நூலகம் திறக்கப்படுகிறது.

தொடர்ந்து, இரண்டாவது கட்டமாக வரும் 23-ம் தேதி நெல்லைமாவட்டத்தில் 5 இடங்கள், கோவையில் 4 இடங்கள், ஈரோட்டில் 3, தென்காசியில் 2, சேலம், புதுக்கோட்டை, கரூர், சிவகங்கை, திண்டுக்கல் மேற்கு, கன்னியாகுமரி, திருப்பூரில்ஆகிய மாவட்டங்களில் தலா ஒருஇடம் என மொத்தம் 21 இடங்களில்நூலகம் திறக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைப்பின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நூலகத்தை இன்று திறந்துவைக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE