நாமக்கல்லில் பால் பதப்படுத்தும் பண்ணை தேசிய பால்வள வாரியத்திடம் பணியை ஒப்படைக்க அனுமதி

By செய்திப்பிரிவு

சென்னை: நாமக்கல்லில் தினசரி 2 லட்சம் லிட்டர் பாலை பதப்படுத்தும் பால்பண்ணை, பால் பொருட்கள் தயாரிக்கும் ஆலையை ரூ.89.29 கோடியில் அமைப்பதற்கான பணியை தேசிய பால்வள வாரியத்திடம் ஒப்படைக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

இதுகுறித்து பால்வளத் துறை செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் தினசரி 2 லட்சம் லிட்டர்பாலை பதப்படுத்தும் பால்பண்ணை மற்றும் பால்பொருட்கள் தயாரிக்கும் ஆலையை ரூ.89.29 கோடியில் நிறுவும் பணியை தேசிய பால்வள வாரியத்திடம் ஒப்படைக்க தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையத்துக்கு அனுமதியளித்து தமிழகஅரசால் கடந்த நவ.16-ம்தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுஉள்ளது. பால் கூட்டுறவு சங்கங்களுக்கான பால் உட்கட்டமைப்பு திட்டச் செயல்பாட்டில் தேசிய பால்வள வாரியத்தின் தனித்தன்மையைக் கருத்தில் கொண்டு, நாமக்கல்லில் தினசரி 2 லட்சம் லிட்டர் ‘ஹைடெக் பால் பண்ணையை நிறுவுதல்’ என்ற திட்டம், வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டள்ளது.

பொருளாதார உயர்வு: நாமக்கல் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார உயர்வு ஆகியவற்றை உறுதி செய்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். நுகர்வோரின் எதி்ர்காலத் தேவையைப் பூர்த்தி செய்யவும் பால் பதப்படுத்துதலை விரிவுபடுத்தவும் இத்திட்டம் மிகவும் அவசியமானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்