மதுரை: மதுரை ஆட்சியர் அலுவலக கருவூலத்தில் வைக்கப்பட்டிருந்த இலவச வேட்டி, சேலைகள் திருடப்பட்ட வழக்கில் நில அளவை கள உதவியாளரின் முன்ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கருவூலத்தில் தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் இலவச வேட்டி, சேலைகள் வைக்கப்பட்டிருந்தது. இந்த கருவூலத்தில் இருந்து நவ.7-ல் ரூ.15 லட்சம் மதிப்புள்ள 12500 வேட்டி சேலைகள் திருடப்பட்டன. இது தொடர்பாக தல்லாகுளம் போலீஸார் வழக்கு பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி நில அளவை கள உதவியாளர் சரவணன் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், 'வேட்டி, சேலை திருட்டு சம்பவத்தில் எனக்கு தொடர்பு இருப்பதாக கைது செய்யப்பட்டவர்கள் போலீஸில் தெரிவித்துள்ளனர். நான் நில அளவை கள உதவியாளராக பணிபுரிகிறேன். எனக்கும் வேட்டி, சேலை திருட்டுக்கும் தொடர்பு இல்லை. எனவே முன்ஜாமீன் வழங்க வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், ''மனுதாரர் திருட்டுக்கு மூளையாக செயல்பட்டுள்ளார். அவரை கைது செய்து விசாரிக்க வேண்டியதுள்ளது. இதனால் முன்ஜாமீன் வழங்கக் கூடாது'' என்றார். இதையடுத்து நீதிபதி, ''இலவச வேட்டி, சேலைகள் எங்கு வைக்கப்பட்டுள்ளது, அந்த அலுவலக கதவை மனுதாரர் திறந்து விட்டதாகவும் வழக்கில் கைதானவர்கள் போலீஸில் தெரிவித்துள்ளனர். இதனால் மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது'' என உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
33 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago