நோய் பாதிப்புகளில் இருந்து தற்காத்து கொள்ள பொது விநியோக குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும்: சுகாதாரத் துறை

By செய்திப்பிரிவு

சென்னை: நோய் பாதிப்புகளிலிருந்து தற்காத்துக் கொள்ள பொது விநியோககுடிநீரை காய்ச்சிக் குடிக்க வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், தமிழகம் முழுவதும் டெங்கு, மலேரியா, டைபாய்டு உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்களின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்னும் 2 மாதங்களுக்கு காய்ச்சல்களின் பாதிப்புஅதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக, ஏடிஸ் கொசுக்களின்உற்பத்தி அதிகரித்துள்ளதால், டெங்கு பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், பொது விநியோக தண்ணீரை பொதுமக்கள் நன்றாகக் காய்ச்சி குடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பொது சுகாதாரதுறை இயக்குநர் செல்வ விநாயகம்கூறியதாவது: கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடிக்கும்போது மஞ்சள்காமாலை, டைபாய்டு, எலி காய்ச்சல், மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட100-க்கும் மேற்பட்ட வைரஸ் மற்றும்பாக்டீரியா பாதிப்புகள் ஏற்படக்கூடும். இதைத் தடுக்க தண்ணீரைக் காய்ச்சிக் குடிப்பதுதான் சிறந்ததீர்வாகும். பொது விநியோகத்தில்வழங்கப்படும் குடிநீரில், குளோரின் கலந்து விநியோகிக்கப்படுகிறது. ஆனால், குளோரின், பாக்டீரியாதொற்றை மட்டும் அழிக்கும், வைரஸ் பாதிப்பைத் தடுக்காது.எனவே, குளோரின் கலந்திருந்தாலும், குடிநீரை காய்ச்சி குடிக்கும் போது, பல்வேறு விதமான நோய் பாதிப்புகளிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE