முதல்வர் காப்பீட்டு முகாம் டிச.2-க்கு தள்ளிவைப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் புதிய குடும்பங்களை சேர்க்க, தமிழகம் முழுவதும் நாளை நடக்கவிருந்த சிறப்பு முகாம் டிசம்பர் 2-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்டத்தில் 1.44 கோடி குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றன.

இந்நிலையில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம்கள் நவம்பர் 18-ம் தேதி தமிழகம் முழுவதும் 100 இடங்களில் நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.

இந்த முகாம்களில் காப்பீட்டு திட்டத்தில் அட்டைகள் பெறாதவர்கள் கலந்துகொண்டு பயனடையலாம். பலர் கடந்த 2006-ம் ஆண்டு வழங்கப்பட்ட காப்பீட்டு திட்ட அட்டையை வைத்துள்ளனர். அந்த அட்டை தற்போது செயல்பாட்டில் உள்ளதா என்று ஆராய்ந்து புதிய அட்டையை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நாளை நடக்கவிருந்த சிறப்பு முகாம், சில நிர்வாக காரணங்களால் டிச.2-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்