சென்னை: சென்னை சென்ட்ரல் - பித்ரகுண்டா இடையே 5 நாட்களுக்கு விரைவு ரயில் சேவை ரத்து செய்யப்பட உள்ளது. தென் மத்திய ரயில்வேயில் குண்டக்கல் மற்றும் விஜயவாடா கோட்டத்தில் ரயில்வே பொறியியல் பணி நடக்கவுள்ளது. இதன் காரணமாக, சென்னை சென்ட்ரல் - பித்ரகுண்டா ரயில் சேவை ரத்து செய்யப்பட உள்ளது. அதன் விவரம்: சென்னை சென்ட்ரல் - பித்ரகுண்டாவுக்கு நவ. 20-ம் தேதி முதல் நவ.24-ம் தேதி வரை 5 நாட்களுக்கு மாலை 4.30 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் (17238), பித்ரகுண்டா-சென்னை சென்ட்ரலுக்கு அதே நாட்களில் அதிகாலை 4.45 மணிக்கு புறப்படும் விரைவு ரயில்(17237) ஆகியவை ரத்து செய்யப்பட உள்ளன.
இதுபோல, காட்பாடி- திருப்பதிக்கு நவ.20-ம் தேதி முதல் நவ. 26-ம் தேதி வரை இரவு 9.15 மணிக்கு இயக்கப்படும் பாசஞ்சர் சிறப்பு ரயில், திருப்பதி-காட்பாடிக்கு அதே நாட்களில் காலை 6.50 மணிக்கு இயக்கப்படும் பாசஞ்சர் சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட உள்ளன. இதுதவிர 18 ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளன.
வாராந்திர விரைவு ரயில் ரத்து: மத்திய மேற்கு ரயில்வேயில் பொறியியல் பணி காரணமாக, சில ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன. சென்னை சென்ட்ரல்- ஸ்ரீ வைஷ்ணோ தேவி கத்ராவுக்கு டிச. 8, 9-ம் தேதி புறப்படும் வாராந்திர விரைவு ரயில் (16031), ஸ்ரீ வைஷ்ணோ தேவி கத்ரா - சென்னை சென்ட்ரலுக்கு டிச.8, 9 ஆகிய தேதிகளில் இரவு 10.30 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் (16032), சென்னை சென்ட்ரல் - லக்னோவுக்கு டிச. 5-ம் தேதி புறப்படும் வாராந்திர விரைவு ரயில் (16093), லக்னோ - சென்னை சென்ட்ரலுக்கு டிச. 7-ம் தேதி புறப்படும் வாராந்திர விரைவு ரயில் (16094) ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன. இந்தத் தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago