ரஜினியின் புதிய அரசியல் கட்சியின் பெயர், சின்னம் மதுரையில் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என நடிகர் ராகவா லாரன்ஸ் நம்பிக்கை தெரிவித்தார்.
நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்தை அண்மையில் அறிவித்தார். இந்நிலையில் மதுரை மாவட்ட, மாநகர் தலைமை நற்பணி மன்றங்கள் சார்பில் ரஜினியின் 68-வது பிறந்த நாள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், ஒன்றிய-நகர நிர்வாகிகளுக்கு பாராட்டு ஆகிய முப்பெரும் விழா அழகர்கோவிலில் ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. நடிகர் ராகவா லாரன்ஸ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
விழாவில் அவர் பேசியதாவது: 12 வயதில் இருந்து ரஜினியின் ரசிகராக உள்ளேன். மதுரையில் பிரம்மாண்டமான மாநாடு ஒன்று நடத்தும் திட்டம் உள்ளது. அதில் கட்சியின் பெயர், சின்னம், கொள்கைகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மதுரை மண் அரசியல் பிரவேசத்துக்கு முக்கியமான தளமாக இருப்பதால் அவர் மதுரையில் இருந்து அரசியல் தொடங்குவார் எனக் கருதுகிறோம். அவரது ஆன்மிக அரசியல் என்பது தனிப்பட்ட மதத்தை முன்னிலைப்படுத்துவது இல்லை. அனைத்து சாதி, மதங்களையும் ஒருங்கிணைப்பது ஆன்மிக அரசியல்.
தமிழகத்தை முன்னேற்றப் பாதைக்கு அவரது அரசியல் அழைத்துச் செல்லும். எம்எல்ஏவாக எனக்கு ஆசையில்லை. அவருக்கு காவலராக இருக்க ஆசைப்படுகிறேன் என்று பேசினார்.
விழாவில், மன்றத்தில் தீவிரமாகப் பணிபுரிந்தவர்களுக்கு தையல் மிஷின், வேட்டி, சேலை, சட்டைகள், சில்வர் பானைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சக்கர மோட்டார் சைக்கிள், மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago