10-ம் வகுப்புக்கு மார்ச் 26, 12-ம் வகுப்புக்கு மார்ச் 1-ல் பொதுத் தேர்வு தொடக்கம்: கால அட்டவணையை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் 10, 11, 12 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று (நவம்பர் 16) காலை 9.30 மணியளவில் வெளியிட்டார்.

அதன்படி 10ஆம் வகுப்புக்கு மார்ச் 26 தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரையிலும், பிளஸ் 1 மாணவர்களுக்கு மார்ச் 4 ஆம் தேதி தொடங்கி மார்ச் 25 ஆம் தேதி வரையிலும் தேர்வுகள் நடைபெறுகின்றன. 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி மார்ச் 22 ஆம் தேதி வரையிலும் நடைபெறுகிறது.

பிப்ரவரியில் செய்முறைத் தேர்வுகள்: 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 23 ஆம் தேதி செய்முறைத் தேர்வு தொடங்குகிறது. 29 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கி 24 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பிளஸ் 2 செய்முறைத் தேர்வு பிப்ரவரி 12-ல் தொடங்கி பிப்ரவரி 17 வரை நடைபெறுகிறது.

10 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை

பாடங்கள் தேர்வு தேதி தமிழ் 26.03.2024 ஆங்கிலம் 28.03.2024 கணிதம் 01.04.2024 அறிவியல் 04.04.2024 சமூக அறிவியல் 08.04.2024

12 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை

பாடங்கள் தேதி மொழிப் பாடம் 01.03.2024 ஆங்கிலம் 05.03.2024 கணினி அறிவியல், உயிரி-அறிவியல், புள்ளியியல், 08.03.2024 வேதியியல், கணக்குப் பதிவியியல், புவியியல் 11.03.2024 இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம் 15.03.2024 கணிதம், விலங்கியல், நுண் உயிரியல் 19.03.2024 உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல், பேஸிக் எலக்ட்ரானிக்ஸ் பொறியியல், பேஸிக் சிவில் பொறியியல், பேஸிக் ஆட்டோமொபைல் பொறியியல், பேஸிக் மெக்கானிக்கல் பொறியியல், டெக்ஸ்டைஸ் டெக்னாலஜி, ஆஃபீஸ் மேனேஜ்மென்ட் அண்ட் செக்ரட்டரிஷிப் 22.03.2024

தேர்வு முடிவுகள் எப்போது? 10 ஆம் வகுப்புக்கு மே.10 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. 11 ஆம் வகுப்புக்கு மே.14 ஆம் தேதியும், பிளஸ் 2 மாணவர்களுக்கு மே 6 ஆம் தேதியும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.

தேர்தலை கவனித்தில் கொண்டு அட்டவணை: அடுத்தாண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் பொதுத் தேர்வுகளை அதற்கு முன்பாக நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டது. இந்நிலையில் மக்களவைத் தேர்தல், உயர் கல்விக்கான தேசிய நுழைவுத் தேர்வுகளை கருத்தில் கொண்டு பொதுத் தேர்வுக்கான கால அட்டவணை தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார். மேலும் மாணவர்கள் பொதுத் தேர்வுகளை சிரமமின்றி எதிர்கொள்ளும் வரையில் போதிய இடைவெளி விட்டு தேர்வுகள் நடத்தப்படுகின்றன என்றார்.

கடந்த ஆண்டை ஒப்பிடும்போது தேர்வு நடைபெறும் நாட்கள் சற்றே முன்னதாக இருந்தாலும்கூட வரும் அரையாண்டுத் தேர்வுக்குள்ளதாகவே பாடத்திட்டத்தை முடித்து மாணவர்களைத் தயார்படுத்திவிடலாம் என்று ஆசிரியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர் என்று அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்