சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு 2-வது முறையாக உடல்நலக் குறைவு ஏற்பட்டதைஅடுத்து, மீண்டும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14-ம் தேதி அமலாக்கத் துறைஅதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். பின்னர், அவரிடம் அதிகாரிகள் 5 நாட்கள் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில், அவருக்கு எதிராக, ஆக.12-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
பின்னர், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, அவர் மீதானவழக்கு விசாரணை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. அவரது ஜாமீன் மனுக்களை, சென்னை உயர் நீதிமன்றமும், மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றமும் அடுத்தடுத்து தள்ளுபடி செய்தன.
நீதிமன்றக் காவல் அக்.20-ம் தேதியுடன் முடிந்த நிலையில், புழல் சிறையில் இருந்து காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.அவரது நீதிமன்றக் காவல் நவ. 22-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அவரது நீதிமன்றக் காவல் இதுவரை 10-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
» eCOM, இன்ஸ்டா இஎம்ஐ கார்டு மூலம் பஜாஜ் ஃபைனான்ஸ் கடன் வழங்குவதை நிறுத்த ரிசர்வ் வங்கி உத்தரவு
» உலகக் கோப்பை இறுதியில் இந்தியா: நாடு முழுவதும் ரசிகர்கள் கொண்டாட்டம்!
இதற்கிடையே, வழக்கு விசாரணை, அறுவை சிகிச்சை உள்ளிட்ட காரணங்களால் செந்தில்பாலாஜியின் எடை குறைந்துள்ளது. சிறையில் அவ்வப்போது உடல்நலக் குறைவும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு சிறை மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்து வந்தனர். தேவைப்படும் போது புழல் சிறையில் மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபரில் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், ஆம்புலன்ஸில் ஸ்டான்லி அரசுமருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல்நிலை தேறிய பிறகு, மீண்டும் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்நிலையில், செந்தில் பாலாஜிக்கு நேற்று மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. சிறை மருத்துவர்கள் பரிசோதித்த நிலையில், மேல் சிகிச்சைக்காகசென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம்அழைத்து வரப்பட்டார். அங்கிருந்து அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago