ரயில்வே அப்ரண்டீஸ் முடித்தவர்கள் வேலை கேட்டு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குடும்பத்தினருடன் போராட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: ரயில்வேயில் அப்ரண்டீஸ் பயிற்சி முடித்தவர்கள் தங்களுக்கு வேலைவழங்கக் கோரி குடும்பத்தினருடன் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தெற்கு ரயில்வே மற்றும் ஐசிஎஃப் ஆலையில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டுவரை தொழில் பழகுநர் என்று கூறப்படும் அப்ரண்டீஸ் பயிற்சி முடித்த 17,000 பேர் இருக்கின்றனர். ஆனால்,இதுவரை அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படவில்லை. ரயில்வேயில் அப்ரண்டீஸ் முடித்தவர்களுக்கு வேலை வழங்கக் கோரி, பயிற்சி முடித்தோர் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 5-வது முறையாக நேற்று தங்களது குடும்பத்தினருடன் நடைமேடை 13 அருகே உள்ள பயணிகள் காத்திருக்கும் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்கள், குழந்தைகள் உட்பட 300-க்கும்மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர். இதையடுத்து, அவர்களை போலீஸார் கைது செய்து, புதுப்பேட்டையில் உள்ள சமூகநலக் கூடத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் கூறுகையில்,``அப்ரண்டீஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு வேலை வழங்காமல், தெற்கு ரயில்வே நிர்வாகம் மற்றும்ஐசிஎஃப் புறக்கணித்து வருகின்றன. இதனால், பல ஆயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பின்றி அவதிப்பட்டு வருகிறோம். தெற்குரயில்வேயின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து நாங்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறோம். எங்களது நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி, நாங்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்துவோம்'' என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்