பொதுமக்கள் உயிருக்கும், உடைமைக்கும் தமிழகத்தில் உத்தரவாதம் இல்லை: ஓபிஎஸ் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் பொதுமக்கள் உயிருக்கும், உடைமைக்கும் உத்தரவாதம் இல்லை என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் வெடிகுண்டு தாக்குதல், சென்னை கோவிந்தப்ப நாயக்கன் தெரு சந்திப்பில் உள்ள ஸ்ரீவீரபத்ரசுவாமி கோயில் மீது பெட்ரோல் குண்டு வீச்சு, சென்னையில் உணவக மேலாளர் ரவுடிகளால் அடித்துக் கொலை என்ற வரிசையில் சென்னை கொடுங்கையூர், ஆர்.ஆர்.நகரில், குடியிருப்புகளுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 20-க்கும் மேற்பட்ட ஆட்டோமற்றும் 2 சக்கர வாகனங்கள் ரவுடிகளால் அடித்து நொறுக்கப்பட்டுள் ளதாக செய்திகள் வந்துள்ளன. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும் உத்தரவாதம் இல்லாத சூழ்நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது. காவல் துறையினர் மீதான அச்சம் ரவுடிகளிடையே நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு சட்டம் ஒழுங்கு இன்றியமையாதது என்பதைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE