கடலூர் மாவட்டத்தில் தொடரும் மழைப்பொழிவு

By செய்திப்பிரிவு

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் நேற்றும் 3-வது நாளாக பல இடங்களில் பரவலாக மழை பெய்தது.

கடலூர் மாவட்டத்தில் நவ. 13-ம் தேதி இரவு தொடங்கி நவ. 14-ம் தேதி மாலை வரை கனமழை பெய்தது. நேற்றும் பல்வேறு இடங்கள் சாரல் மழை பெய்தது. தொடர்ந்து வானம் மேகமூட் டத்துடன் காணப்பட்டது. கடலூரில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.

தென்பெண்ணையாற்றில் அதிக அளவில் தண்ணீர் செல்வதால் பண்ருட்டியில் இருந்து கடலூர் வரை உள்ள விஸ்வநாதபுரம், மேல்குமாரமங்கலம், சித்தேரி, கண்டரக்கோட்டை, மருதாடு, கும்தாமேடு ஆகிய தரைப்பாலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

நேற்றைய மழையளவு: கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதியில் 66.4 மி.மீ, புவனகிரியில் 64 மி.மீ, வடக்குத்தில் 57 மி.மீ, அண்ணாமலை நகரில் 53.4 மி.மீ, சிதம்பரத்தில் 52.4 மி.மீ, குறிஞ்சிப்பாடியில் 52 மி.மீ, கடலூரில் 45.6 மி.மீ, பண்ருட்டியில் 44 மி.மீ, காட்டுமன்னார்கோவிலில் 41.4 மி.மீ, ஸ்ரீமுஷ்ணத்தில் 28.2 மி.மீ, விருத்தாசலத்தில் 20 மி.மீ, வேப்பூரில் 15 மி.மீ மழை பெய்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்