தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு: கடலூர் - கும்தாமேடு தரைப்பாலம் மூடல்

By செய்திப்பிரிவு

கடலூர்: தென்பெண்ணையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள் ளதால், கடலூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் எதிரே உள்ள கும்தாமேடு தரைப் பாலம் மூடப்பட்டுள்ளது. தென்பெண்ணையாற்றில், நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழை மற்றும் கிருஷ்ணகிரி அணையிலிருந்து திறந்து விடப்படும் உபரி நீர் காரணமாக கடந்த சிலநாட்களாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள தென்பெண்ணையாற்றில் தற்போதுதண்ணீரின் வேகம் அதிகரித்துள்ளது. இங்குள்ள கும்தாமேடு பகுதியில், கடலூர் மாவட்டத்தை புதுவை பகுதியோடு இணைக்கும் வகையில் தடுப்பணையுடன் கூடிய தரைப் பாலம் அமைக் கப்பட்டுள்ளது.

இந்த பாலத்தின் மீது செல்லும் தண்ணீரின் அளவு தற்போது அதிகரித்து வருகிறது. இதை பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர். ஆபத்தை உணராத இப்பகுதி மக்கள் இந்தபாலத்தின் வழியாக செல்கின்றனர். அந்த கரையில் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மதுபான கடைகளுக்கு கடலூரில் இருந்து மது பிரியர்கள் சென்று வருகின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள் பாலத்தின் மீது செல்லும் போது, பாலத்தில் விழுந்து எழுந்து செல்லும் நிலையும் உள்ளது. ஆண்டு தோறும் இந்த பாலத்தில் நடைபெறும் விபத்துகளால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது.

தென்பெண்ணையாற்றில் கும்தாமேடு தரை பாலம் பகுதியில் மீட்பு குழு போலீஸார்
படகில் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

தற்போது இந்த பாலத்தின் மீது போக்குவரத்தை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதைதொடர்ந்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கும்தா மேடு தரை பாலத்துக்கு செல்லும் வழியை போலீஸார் பேரிகார்டு அமைத்து அடைத்துள்ளனர். பாலத்துக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை கண்காணிக்க அந்த பகுதியில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் ராஜாராம் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மில்டன் தலைமையில் 10 பேர் கொண்ட மீட்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மீட்பு குழுவானது கடலூர் மாவட்டம் முழுவதும் நீர்நிலைகளில் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக சம்பவ இடத்துக்கு நேரில்சென்று மீட்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த மீட்பு குழுவினர் 5 படகுகள், உயிர்காக்கும் கருவிகள், கயிறு உள்ளிட்ட பாதுகாப்பு மற்றும் மீட்பு பொருட்களுடன் நேற்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள தென்பெண்ணையாற்றில் படகு களில் சென்று பார்வையிட்டனர். அப்போது எச்சரிக்கை மற்றும் தடையை மீறி பாலங்களில் ஏதேனும் வாகனங்களில் செல்கிறார்களா? நடந்து செல்கிறார்களா? குளிக்கின்றனரா? என்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தென்பெண்ணையாறு கரை யோர மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கையும் விடப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE