வீட்டில் எப்படியாவது ஒரு கழிப்பறையைக் கட்ட வேண்டும். மதுப் பழக்கத்தை கைவிட வேண்டும் என்று ஐந்து ஆண்டுகளாக தனது கணவருடன் போராடியும் தனது தாயால் சாதிக்க முடியாததை, ஒரு மகளாக தனது தந்தையிடம் சில மாதங்களிலேயே சாதித்து காட்டிய முதல் வகுப்பு மாணவி தாரணிக்கு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த நெகிழ்ச்சியான நிகழ்வின் விவரம்:
திண்டுக்கல் மாவட்டம், அம்பாத்துரை ஊராட்சி எஸ்.குரும்பபட்டியை சேர்ந்த கூலித் தொழிலாளி ராஜபாண்டி. இவரது மனைவி கார்த்திகா. இவரும் கூலி வேலை செய்து வருகிறார். இவர்களது மகள் தாரணி (6). எஸ்.குரும்பபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வருகிறார். இவரது பள்ளி ஆசிரியை பிரியதர்ஷினி.
இவர் வகுப்பறையில் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த திறந்தவெளி கழிப்பிடங்கள் கூடாது. கழிப்பறையைதான் பயன்படுத்த வேண்டும் என நடத்திய பாடம் சிறுமியின் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. இதையடுத்து வீட்டுக்குச் சென்ற சிறுமி, வீட்டில் கழிப்பறையை கட்டவேண்டும் என பெற்றோரிடம் அடம் பிடித்துள்ளார்.
திறந்தவெளியில் கழிப்பிடம் செல்வது அவமானம் என்று ஆசிரியர் கூறியதையும் தெரிவித்துள்ளார். தனது மகளிடம் பிறகு பார்க்கலாம் என்று பதில் சொன்ன தந்தை ராஜபாண்டியிடம், வீட்டில் அவசியம் கழிப்பறை கட்ட வேண்டும் என தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.
இதனால் ஒரு கட்டத்தில் வீட்டில் கழிப்பறையைக் கட்டியுள்ளார் ராஜபாண்டி. இதையடுத்து தாய்க்கும், மகளுக்கும் மிகுந்த சந்தோஷம்.
தந்தையை காப்பாற்றிய சிறுமி
முதல் வெற்றியை அடைந்த அந்த பிஞ்சு, அடுத்ததாக தனது தந்தையின் மதுப் பழக்கத்தையும் ஒழிக்க முயற்சி எடுத்துள்ளார்.
தினமும் மது குடித்துவிட்டு வந்து, வீட்டில் தனது தாயிடம் சண்டை போடும் தந்தையிடம் மதுப்பழக்கத்தை விட்டுவிடும்படி அறிவுரை கூறியுள்ளார் தாரணி. மதுப்பழக்கத்தை விடாமல் தொடரவே ஒருநாள் தந்தையிடம், ‘இந்தப் பழக்கத்தை தொடர்ந்தால் நானும், அம்மாவும் தாத்தா வீட்டுக்குச் சென்று விடுவோம்’ என இறுதியாக எச்சரித்த ுள்ளார்.
இதற்கு உரிய பலன் கிடைத்தது. தனது மகளின் வற்புறுத்தலால் ஒருகட்டத்தில் தனது மதுப் பழக்கத்தை கைவிட்டார் ராஜபாண்டி.
சிறுமியின் தாய் கார்த்திகா கூறியதாவது: ஐந்து ஆண்டுகளாக எனது கணவரிடம் வீட்டில் கழிப்பறை கட்டும்படியும், மதுப்பழக்கத்தை விடும்படியும் போராடினேன். அதைக் கண்டு கொள்ளாத எனது கணவர், மகள் தாரணியின் வற்புறுத்தலால் கழிப்பறை கட்டியும், மதுப்பழக்கத்தை கைவிட்டும் உள்ளார். என்னால் சாதிக்க முடியாததை மகள் சாதித்தது எல்லையில்லா மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
சிறுமிக்கு விருது
சிறுமியின் இந்த செயலைப் பாராட்டி தூய்மை இந்தியா திட்டத்தில் செயல்படுத்தப்படும் தனிநபர் கழிப்பறை திட்டத்தை ஊக்குவித்ததற்காக, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் வழங்கப்படும் விருதுக்கு சிறுமி தாரணி பரிந்துரை செய்யப்பட்டார்.
இதையடுத்து திண்டுக்கல் ஆட்சியர் டி.ஜி.வினய் குடியரசு தினவிழாவில் தாரணிக்கு பதக்கம், கேடயம், சான்றிதழை வழங்கினார்.
சிறுமியின் பெற்றோர், வகுப்பு ஆசிரியை பிரியதர்ஷினி, பள்ளித் தலைமை ஆசிரியை பொற்செல்வி, ஆசிரியை கண்மணி ஆகியோர் உடன் இருந்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
42 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago