சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் வரை உச்சநேர கட்டணம் வசூலிக்கப்படாது: தமிழக அரசு

By செய்திப்பிரிவு

சென்னை: சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான உயர்த்தப்பட்ட உச்சநேர மின்கட்டணம், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் வரை வசூலிக்கப்படமாட்டாது என தமிழக அரசின்அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ம் தேதி தமிழக அரசு மின்கட்டணத்தை உயர்த்தியது. இதில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிலைக் கட்டணம், பீக் ஹவர் எனப்படும் உச்சநேர கட்டணங்கள் உயர்த்தப்பட்டன.

தொழில் நிறுவனங்கள் போராட்டம்: இதையடுத்து, மின்கட்டண உயர்வால் தங்களது தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் போராட்டத்தில் ஈடுபட்டன.

குறிப்பாக, 430 சதவீதமாக உயர்த்தப்பட்ட நிலைக் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். உயர்த்தப்பட்ட 25 சதவீத உச்சநேர கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். சோலார் மேற்கூரை அமைப்பதற்கான நெட் வொர்க் கட்டணத்தைக் குறைக்க வேண்டும். பல்முனை ஆண்டுக்கான கட்டணத்தை உடனடியாக ரத்து செய்வதோடு, 2 ஆண்டுகளுக்கு மின்கட்டணம் உயர்த்துவதை தவிர்க்கவேண்டும். 12 கிலோவாட் வரை மின்சார இணைப்பு பெற்றுள்ள குறு,சிறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 3 பி-யில் இருந்து 3ஏ1 நடைமுறைக்கு மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் கடந்த மாதம் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அறிவித்தன.

முதல்வர் உத்தரவு: இதையடுத்து இந்நிறுவனங் களுக்கான மின்கட்டண முறைகளை மாற்றி அமைத்து முதல்வர் உத்தரவிட்டார். ஆனால், தமிழக அரசு தங்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை எனக் கூறி தமிழகம் முழுவதும் கடந்த செப்.25-ம் தேதி வேலைநிறுத்தப் போராட்டம் நடந்தன.

இதையடுத்து, அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் சங்க பிரநிதிகளுடன் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து, 12 கிலோவாட் வரை மின்சாரஇணைப்பு பெற்றுள்ள தொழில் நிறுவனங்களுக்கு 3பி-யில் இருந்து 3ஏ1என்ற பழைய நடைமுறைக்கு மாற்றப்பட்டது. மற்ற 4 கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை. இதை யடுத்து, தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர்கள் கூட்டமைப்பு சார்பில், சென்னையில் கடந்த மாதம் 16-ம் தேதி ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், சிறு, குறு மற்றும்நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான உயர்த்தப்பட்ட உச்சநேர மின்கட்ட ணம், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் வரை வசூலிக்கப்படமாட்டாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதேபோல், சோலார் மேற்கூரை அமைப்ப தற்கான நெட்வொர்க் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு 50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், ரூ.196.10 கோடி இழப்பு ஏற்படுவதாக தமிழக அரசின் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்கட்டண உயர்வால் தங்களது தொழில் பாதிக் கப்பட்டுள்ளதாகக் கூறி சிறு, குறு தொழில்நிறுவனங்கள் போராட் டத்தில் ஈடுபட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்