சென்னை: அகவிலைப்படியை உயர்த்திவழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒருபகுதியாக சென்னை, பல்லவன் சாலையில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழகத் தலைமையகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கருப்பு உடை அணிந்து பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு எம்டிசி ஓய்வு பெற்றோர் சங்கத் தலைவர் டி.குருசாமி தலைமை வகித்தார். இதில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் அமைப்பின் (சிஐடியு) பொதுச்செயலாளர் கே.கர்சன், பொருளாளர் வரதராஜன், துணைபொதுச்செயலாளர் கே.வீரராக வன், எஸ்.சண்முகம், எஸ்இடிசி பிரிவு தலைவர் பிரம்மநாயகம், செயலாளர்கள் சண்முகம், நடராஜன், அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் என்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது: கருப்பு தீபாவளி: கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர்மாதத்துக்குப் பிறகு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. இதனை வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும், அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இதனால்சொற்பத் தொகையே ஓய்வூதியமாக கிடைக்கிறது. இது எங்களுக்குகருப்பு தீபாவளி என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். அகவிலைப் படி உயர்வை விரைந்து வழங்க வேண்டும். மருத்துவப் படியை ரூ.300-ஆக உயர்த்தி வழங்க வேண்டும். குறைந்தபட்சமாக ரூ.7,850 ஓய்வூதியம் வழங்க வேண்டும். குடும்பபாதுகாப்பு நிதி ரூ.50 ஆயிரம்வழங்க வேண்டும். ஓய்வூதியர் களுக்கு மருத்துவக் காப்பீடுவழங்க வேண்டும். ஓய்வூதியத்துக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும். ஊதிய ஒப்பந்த நிலுவைகள் வழங்கப்பட வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் அடுத்தகட்டமாக தீவிர போராட்டத்தை முன்னெடுப்போம் என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
31 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago