சென்னை: தீபாவளியையொட்டி நேற்று முதல் சிறப்பு பேருந்துகள் இயங்கத் தொடங்கின.
வரும் 12-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதற்காக பொதுமக்கள் சிரமமின்றி சொந்த ஊர்களுக்கு பயணமாகும் வகையில் தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன்படி நேற்று முதல் சிறப்பு பேருந்துகள் இயங்கத் தொடங்கின. சென்னையை பொருத்தவரை பிற்பகல் முதலே போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இதற்கு அவ்வப்போது பெய்து வரும் மழையும் காரணமாக இருந்தது. அதே நேரம், மாதவரம் பேருந்து நிலையம், கே.கே.நகர் பேருந்து நிலையம், தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம், பூவிருந்தவல்லி பைபாஸ் (மாநகர போக்குவரத்துக் கழக பணிமனை), கோயம்பேடு பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இது தொடர்பாக பயணிகளுக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவரவர் செல்லும் ஊர்களுக்கு ஏற்ப பேருந்து நிலையங்களுக்குச் சென்று பயணத்தைத் தொடர்ந்தனர். இந்த பேருந்து நிலையங்களை இணைக்கும் வகையில் கோயம்பேட்டில் இருந்து மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டன. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தென்மாவட்டம் உள்ளிட்ட சில ஊர்களுக்குச் செல்லும் பயணிகள் மட்டுமே வருகை தந்தனர்.
ஆம்னி பேருந்துகளைப் பொருத்தவரை, கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையங்கள் வாயிலாக பயணிகளை ஏற்றிச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர், தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதைத் தவிர்த்து திருப்போரூர் - செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளி வட்டச் சாலை வழியாக செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தனர்.
பேருந்து இயக்கம் தொடர்பாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் நேற்றைய தினம் 1,365 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டிருந்தது. இதில் பொதுமக்களுக்குத் தேவையான அளவு பேருந்துகள் இயக்கப்பட்டன. அதேநேரம், சென்னையில் இருந்து பயணிக்க 19,858 பேர் முன்பதிவு செய்திருந்தனர். அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் அனைத்து இருக்கைகளும் பூர்த்தியான பேருந்துகள் மட்டும் கோயம்பேட்டிலிருந்து புறப்பட்டு பூவிருந்தவல்லி, நசரத்பேட்டை, வெளிவட்டச் சாலை வழியாக வண்டலூர் சென்றடையும் வகையில் இயக்கப்பட்டன. இந்த பேருந்துகளில் தாம்பரம் மற்றும் பெருங்களத்தூரில் இருந்து பயணம் மேற்கொள்ள முன்புதிவு செய்த பயணிகள் கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிறுத்தத்தில் ஏறிக்கொள்ள வழிவகை செய்யப்பட்டிருந்தது. தமிழக அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கும் 94450 14450, 94450 14436 ஆகிய தொலைபேசி எண்களை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151 மற்றும் 044 2474 9002, 044 2628 0445, 044 2628 1611 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என்றனர்.
» புதுச்சேரி | என்ஐஏ அதிகாரிகளிடம் பிடிப்பட்டவர் அறையில் கஞ்சா: கொல்கத்தாவைச் சேர்ந்த இருவர் கைது
புதிய உதவி எண்: அரசு போக்குவரத்துக் கழக பேருந்து இயக்கம் தொடர்பாக பொதுமக்கள் தங்களின் குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்க 1800 599 1500 என்ற கட்டணமில்லா உதவி எண் கடந்த மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இதை எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள இயலவில்லை என்று பெறப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில், 149 எனும் புதிய உதவி எண் மூலமாக மக்கள் மற்றும் பயணிகள் தங்களது குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்கலாம் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
40 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago