நுகர்பொருள் வாணிபக்கழக பணியாளர்களுக்கு 20% போனஸ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டுள்ளார்.

இதுகுறித்து உணவுத்துறை செயலர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 2022-23ம் ஆண்டுக்கான போனஸ் 8.33 சதவீதம் மற்றும் கருணைத் தொகை 11.67 என 20 சதவீதம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து, போனஸ் சட்டத்தின் கீழ் வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அவர்களுடைய சம்பளத்தில் 20 சதவீதம் போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதவிர தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் கருணைத் தொகையாக வழங்கவும் உத்தர விடப்பட்டுள்ளது.

இதன்படி, தமிழகம் முழுவதும்உள்ள அனைத்து மண்டலங்கள்,நவீன அரிசி ஆலைகள், கிடங்கு கள், நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மற்றும் திறந்த வெளி சேமிப்பு மையங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் சுமார் 49,023பணியாளர்களுக்கு ரூ.29 கோடிபோனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்க ஆணையிடப் பட்டு, வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதேபோல், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத் தொழிலாளர்களுக்கு (டேன் டீ) 20 சதவீத போனஸ் வழங்கவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்