தொடர் விடுமுறையை முன்னிட்டு 3 நாட்களுக்கு மெட்ரோ ரயில் சேவைகள் அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தீபாவளி பண்டிகை விடுமுறை காரணமாக, சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக, இன்று (நவ.9) முதல் சனிக்கிழமை (நவ.11) வரை 3 நாட்களுக்கு நெரிசல் மிகுந்த நேரங்களில் (மாலையில்) மெட்ரோ ரயில் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயில்களில் தினசரி 2.50 லட்சம் பேர் முதல் 2.80 லட்சம் பேர் வரை பயணிக்கின்றனர். பயணிகள் தேவைக்கு ஏற்ப ரயில் சேவை அதிகரிக்கப்படுகிறது.

அந்த வகையில், தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு, சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக, இன்று(நவ.9) முதல் சனிக்கிழமை (நவ.11)வரை 3 நாட்களுக்கு மாலை முதல்இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தீபாவளி தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக, வியாழன் (நவ.9) முதல் சனிக்கிழமை (நவ.11) ஆகிய நாட்களில் இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரை கூடுதல் சேவை வழங்கப்பட உள்ளது.

அதாவது, இரவு 8 மணி முதல் 10 மணி வரை மெட்ரோ ரயில் சேவைகள் இரு வழித்தடங்களிலும் 9 நிமிட இடைவெளிக்கு பதிலாக 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். போக்குவரத்து நெரிசல் மற்றும் சிரமம் இல்லாத பயணத்தை மேற்கொள்ள பயணிகள் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்