உதகையில் அரசுப் பேருந்தை தனது நண்பர்களுக்கு இயக்க கற்றுத் தந்த தற்காலிக ஓட்டுநரால், பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
அரசுப் போக்குவரத்து கழக ஊழியர்கள் கடந்த 7 நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.தற்காலிக ஓட்டுநர்கள் மூலம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
உதகை கிளை 1 கிளன்மார்கன் கிராமத்துக்கு தற்காலிக ஓட்டுநர் மூலம் அரசுப் பேருந்து இயக்கப்பட்டது. இந்த பேருந்தை இயக்கிய ஓட்டுநர், பேருந்தில் பயணம் செய்த தனது நண்பர்களுக்கும் பேருந்து இயக்க வாய்ப்பு அளித்துள்ளார். நண்பர்களை பேருந்து இயக்கச் சொல்லி, அவர்கள் அருகில் நின்று கொண்டு சொல்லிக்கொடுத்து வந்துள்ளார். ஒருவர் மட்டுமல்லாமல் பலரும் இவ்வாறு பேருந்தை இயக்க அந்த ஓட்டுநர் வாய்ப்பளித்துள்ளார். தற்காலிக ஓட்டுநர்கள் பேருந்தை இயக்குவதால் அச்சத்துடனே பயணிக்கும் பயணிகள், ஓட்டுநர் பேருந்தை பயிற்சிக்கூடமாக மாற்றியதைக் கண்டு அதிர்ச்சியுடன் பயணித்துள்ளனர்.
இதுகுறித்து, அரசுப் போக்குவரத்துக் கழக உதவி மேலாளர் (வர்த்தகம்) கணேசனிடம் கேட்டபோது, ‘கடந்த 8-ம் தேதி மதியம் 12 மணிக்கு எடுத்து செல்லப்பட்ட அந்த பேருந்து, 9-ம் தேதி 12.30 மணிக்கு நிலையத்துக்குள் வந்துள்ளது. இந்த இடைப்பட்ட நேரத்தில்தான் பயணி ஒருவர் பேருந்தை இயக்கியுள்ளார்.
பேருந்தை ஓட்டிச் சென்ற காட்வின் இன்று பணிக்கு வரவில்லை. அவரது லைசென்ஸ் எங்களிடம்தான் உள்ளது. இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடும் ஓட்டுநர்களுக்கு பணி வழங்கப்பட மாட்டாது’ என்றார்.
டிக்கெட் வசூலில் முறைகேடு?
மேலும், தற்காலிக நடத்துநர்கள், வசூலாகும் உரிய தொகையை போக்குவரத்து கழகத்துக்கு சமர்ப்பிப்பதில்லை என்றும், இதனால் கடந்த ஒரு வார காலத்தில் ரூ.50 லட்சம் வரை போக்குவரத்துக் கழகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தொழிற்சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து பதிலளித்த கணேசன், ‘டிக்கெட் பரிசோதகர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், வசூலில் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது. தற்போதைக்கு மக்களுக்கு சேவை செய்யவே பேருந்துகள் இயக்கப்படுகின்றன’என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
52 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago