சமூக நீதியை காக்கும் அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

By செய்திப்பிரிவு

செய்யாறு: சமூக நீதியை காக்கும் அரசு உடனடியாக சாதிவாரி கணக் கெடுப்பு நடத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் செய்யாறு மற்றும் வந்தவாசி தொகுதி பாமக வாக்குச் சாவடி பொறுப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், பா.ம.க. தலைவர் அன்பு மணி ராமதாஸ் தலைமை தாங்கி பேசினார்.

பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘தமிழ கத்திலேயே 6,200 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட இரண்டாவது பெரிய மாவட்டமான திருவண்ணா மலையை நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரி வருகிறேன். தொழில் வளர்ச்சியை என்றைக்கும் பாமக ஆதரிக்கும்.

ஆனால், விளை நிலங்களை அழித்துத்தான் தொழிற் சாலைகளை அமைக்க வேண்டும் என்பதில்லை. செய்யாறு சிப்காட் 3-வது கட்ட விரிவாக்கம் மட்டுமல்ல தமிழகத்தில் எங்கும் விளை நிலங்களை அரசு கையகப்படுத்தினாலும் பாமக அதனை அனுமதிக்காது. கடந்த 50 ஆண்டுகளில் 10 சதவீதம் விளை நிலங்கள் அதாவது, 42 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இன்னும் 10 ஆண்டுகளில் உணவு தட்டுப் பாடு ஏற்படும் என ஐ.நா எச்சரிக்கிறது.

வெளி மாநிலம் மட்டுமல்ல வெளி நாடுகளில் உணவுப் பொருட் களுக்கு யாசகம் எடுக்கும் நிலை ஏற்படும். செய்யாறு சிப்காட் விரிவாக்கத்தை கைவிட கோரி ஆர்ப்பாட்டம் செய்த விவசாயிகளை தீவிரவாதிகளை போல் கைது செய்து வேலூர், கடலூர், புழல், பாளையங்கோட்டை என தனித் தனி சிறைகளில் அடைத்திருப்பது கண்டிக்கத்தக்கது. அவர்களை, உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

சென்னை அருகே கும்மிடிப் பூண்டியிலும் 1,500 ஏக்கர் விளை நிலம் கையகப்படுத்தி அழித்து அறிவு நகர் உருவாக்கப்படுவது வெட்கக் கேடானது. செய்யாறு - தென்பெண்ணை ஆறு இணைப்பு திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. செய்யாறில் போதிய போக்குவரத்து வசதி உள்ளிட்ட அடிப்படை வளர்ச்சிகளே இல்லை.

இந்தியாவில் முன் மாதிரியாக பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி 75 சத இட ஒதுக்கீட்டினை அறிவித்துள்ளார். 2008 புள்ளி விவர சட்டப்படி சாதிவாரி கணக்கெடுக்கும் உரிமை மாநில அரசுக்கும் உள்ளது. சாதி வாரி கணக்கெடுப்பு மூலம் மக்களின் பொருளாதாரம், கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் அடிப் படை வசதிகளுக்காக அரசு திட்டமிட வேண்டும். மாநில அரசின் உரிமையாக சாதிவாரி கணக்கெடுப்பு செய்ய வேண்டும்.

சமூக நீதியை காக்கும் அரசு உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். கைத்தறிபட்டு கலாச்சாரம் பாரம்பரியமிக்கது மட்டுமல்ல நெசவாளர்களின் வாழ் வாதாரமும் அதுதான். விசைத்தறியில் பட்டு சேலை உற்பத்தி செய்வதற்கு சில அதிகாரிகள் துணை போவதை கண்டிக்கிறேன். நான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போதே 'நீட்' தேர்வினை அனுமதிக்கவில்லை.

‘நீட்' தேர்வு என்பது சமூக நீதிக்கு எதிரானது. இதனால், பணக்காரர்கள், நகர்ப்புற வாசிகள் தான் பயன்படுகிறார்கள். ‘நீட்' தேர்வு என்பது ஒரு மோசடி தேர்வு. ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் கோடி பணத்தை கோச்சிங் சென்டர், தனியார் மருத்துவ கல்லூரிகளும் கொள்ளையடித்து வருகின்றனர். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ம.க.வின் நிலைப்பாடு விரைவில் அறிவிக்கப்படும்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE