ஜெர்மனியில் உள்ள வைட்டமின் ஏ மூலப்பொருள் உற்பத்தி நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தால், தமிழகத்தில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் பணி பாதிக்கப்பட் டுள்ளது.
கடந்த 1970-ம் ஆண்டு முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் திட்டம் மத்திய அரசால் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டது. அதன் வெற்றியைத் தொடர்ந்து நாடு முழுவதும் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. மேலும் இத்திட்டத்தை உலக சுகா தார நிறுவனம் அங்கீகரித்து, பல்வேறு நாடுகளில் செயல்படுத்தவும் அறிவுறுத்தி யுள்ளது.
மத்திய அரசு நிதியில் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தின்கீழ் தமிழகத்தில் மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் ஆண்டுக்கு இரு தவணைகளாக வைட்டமின் ஏ திரவம் வழங்கப்படுகிறது. 5 முதல் 11 மாத குழந்தைகளுக்கு 1 மிலி அளவும், 11 மாதங்களுக்கு மேல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 2 மிலி அளவும் வைட்டமின் ஏ திரவம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் ஆண்டுக்கு 60 லட்சம் குழந்தை கள் பயன்பெறுகின்றனர்.
சென்னை மாநகராட்சி சார்பில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வைட்டமின் ஏ திர வம் வழங்கப்பட்டது. 2-வது தவணை யாக செப்டம்பரில் வழங்கப்படவில்லை. இதனால் வைட்டமின் குறைபாட்டால் ஏற்படும் நோய்கள் குழந்தைகளை தாக்கும் அபாயம் அதிகரித் துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழக நிர்வாக இயக்குநர் பி.உமாநாத் கூறியதாவது:
கடந்த ஆண்டு 2-வது தவணை வைட்டமின் ஏ திரவம் வாங்க டெண்டர் விடப்பட்டது. அந்த நேரத்தில், உலகின் பல்வேறு நாடுகளுக்கு வைட்டமின் ஏ மூலப்பொருளை விநியோகிக்கும் ஜெர்மனியில் உள்ள நிறுவனத்தில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது. அதனால் உலகம் முழுவதும் வைட்டமின் ஏ திரவ மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. அதன் காரணமாக மருந்தின் விலை 3 மடங்கு உயர்ந்ததால், டெண்டர் எடுத்தவர், மருந்தை விநியோகிக்க முடியவில்லை என்று தெரிவித்துவிட்டார்.
அதனால் தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதிலும் வைட்டமின் ஏ திரவத்தை குழந்தைகளுக்கு வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், மல்டி வைட்டமின் மாத்திரைகளில் சேர்க்க வேண்டிய வைட்டமின் ஏ மூலப்பொருள் கிடைக்காததால், அம்மாத்திரைகளின் தயாரிப்பும் பாதிக்கப்பட்டது. தற்போது நிலைமை சீராகி, வைட்டமின் ஏ திரவம் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறையிடம் அவை வழங் கப்படும் என்றார்.
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை இயக்குநர் கே.குழந்தைசாமியிடம் கேட்டபோது, “வைட்டமின் ஏ திரவம் கிடைத்தவுடன் குழந்தைகளுக்கு விநியோகிக்க முடியாது. அதை நாங்கள் தரப் பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும். பரிசோதனையின் முடிவு வந்த பிறகே ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் மூலமாக விநியோகிக்கப்படும். எனவே வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் இம் மருந்தை விநியோகிக்க திட்டமிட்டிருக்கிறோம்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago