திருவண்ணாமலை/சென்னை/கரூர்/திருச்சி/கோவை: திருவண்ணாமலை, சென்னை, கரூர், திருச்சி, கோவையில் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் 5-வது நாளாக நேற்றும் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
திருவண்ணாமலை அடுத்த தென்மாத்தூரில் உள்ள எ.வ.வேலுவின் வீடு, சரஸ்வதி அம்மாள் அறக்கட்டளை கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட 20 இடங்களில் 5-வது நாளாக நேற்றும் சோதனை தொடர்ந்தது.
அமைச்சருக்கு சொந்தமான மற்றும் நெருக்கமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், கணக்கில் வராத பணம் சிக்கியுள்ளது. கைப்பற்றப்பட்ட பணத்தை, திருவண்ணாமலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் வருமான வரித்துறையினர் செலுத்தி வருகின்றனர். இதுவரை ரூ.20 கோடி செலுத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சென்னையில்...: திருவண்ணாமலை, சென்னை, கரூர், திருச்சி, கோவையில் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் 5-வது நாளாக நேற்றும் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
சென்னையில் அமைச்சர்தொடர்புடைய 20 இடங்களில் மட்டும் சோதனை நடைபெற்றுவருகிறது. மேலும், பறிமுதல்செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்ததில் ஏற்படும் சந்தேகங்களைத் தீர்ப்பதற்காக, சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள், சொத்துகளின் மதிப்பு, ரொக்கம், தங்க நகைகள் குறித்த முழு விவரமும், சோதனை முடிந்தபின்னர் தெரிவிக்கப்படும் என்றுஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோயம்புத்தூரில்...: கோவை நஞ்சுண்டாபுரத்தில் உள்ள பார்சன் குடியிருப்பு வளாகத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஜெயக்குமாரின் வீடு, அவரதுமகன் ஸ்ரீராமுக்குச் சொந்தமாக பீளமேட்டில் உள்ள உணவு மற்றும் கட்டுமானம் சார்ந்த நிறுவனம், சவுரிபாளையத்தில் உள்ள தனியார் கட்டுமான அலுவலகம் ஆகிய இடங்களில் 5-வது நாளாகநேற்றும் சோதனை நடந்தது. இதில்பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
கட்டுமான நிறுவனத்தில் ஏற்கெனவே இயக்குநராகப் பணியாற்றியவரின் சிங்காநல்லூரில் உள்ள வீட்டில் நடத்தப்பட்ட சோதனை நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தது.
கரூர், திருச்சியில்...: கரூரில் அமைச்சர் எ.வ.வேலுவின் உதவியாளர் சுரேஷின் வீடு,காந்திபுரத்தில் உள்ள நிதி நிறுவனம் ஆகிய 2 இடங்களில் 5-வதுநாளாக நேற்றும் சோதனை நடைபெற்றது. தென்னூர் கண்ணதாசன் சாலையில் வசித்து வரும் மணப்பாறையைச் சேர்ந்த தொழிலதிபர் சாமிநாதனின் வீட்டுக்கு நேற்று காலை வந்த வருமான வரித் துறை அதிகாரிகள், அங்கு சோதனை நடத்தினர். மேலும், சாமிநாதன், அவரது மனைவியை அழைத்துச் சென்று, அவர்களது வங்கி லாக்கர்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
35 mins ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
11 hours ago