மயிலாடுதுறை / ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க ஓஎன்ஜிசி விண்ணப்பித் துள்ளதை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் என மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.செயராமன் வெளியிட்டுள்ள அறிக்கை: ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி கோரி தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் ஓ.என்.ஜி.சி நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
முதுகுளத்தூர், பரமக்குடி, திருவாடானை, கீழக்கரை, கடலாடி உள்ளிட்ட பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்கும் திட்டத்தை ஓஎன்ஜிசி நடைமுறைப் படுத்த முயற்சிக்கிறது. நிலப்பகுதியில் 1,259 சதுர கி.மீட்டர் பகுதியிலும், ஆழமற்ற கடற்பகுதியில் 143 சதுர கி.மீட்டர் பகுதியிலும், 3 ஆயிரம் மீட்டர் ஆழத்திலும் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கும் திட்டத்தை ஓஎன்ஜிசி வைத்துள்ளது. இதற்கு, தமிழக அரசு அனுமதி அளிக்கக்கூடாது.
காவிரிப்படுகை மாவட்டங்கள் எண்ணெய், எரிவாயு திட்டங்களால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு நிலமும், நீரும் கெட்டு, மக்கள் நோயாளிகளாக மாறும் நிலைக்கு உள்ளானதால், தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டம் 2020-ல் இயற்றப்பட்டது. இதேநிலை, ராமநாதபுரத்துக்கும் ஏற்படும் அபாயம் இருக்கிறது.
தமிழக அரசு காவிரிப்படுகை மட்டுமின்றி, பிற பகுதிகளையும் அழிவில் இருந்து காக்க வேண்டும். இது தொடர்பான அபாயங்களை விளக்கி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு அரியலூர், கடலூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் நவ.15 முதல் 2 மாத காலத்துக்கு மக்கள் சந்திப்பை நடத்தத் திட்டமிட்டுள் ளது.
தமிழக அரசு பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் ஆய்வறிக் கையை வெளியிட வேண்டும். விளைநிலங்கள் அனைத்தும் வேளாண் மண்டலப் பகுதியாக அறிவிக்கப்பட வேண்டும். காவிரிப் படுகை மட்டுமின்றி, அனைத்து மாவட்டங்களிலும் வேளாண் பகுதிகளைப் பாதுகாக்க, மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு கடமையாற்றும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜவாஹிருல்லா கோரிக்கை - எம்.ஹெச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை: ஓ.என்.ஜி.சி நிறுவனம் ஹைட்ரோ கார்பன் எடுக்க சோதனை கிணற்றுக்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர், பரமக்குடி, கீழக்கரை, கடலாடி வட்டம் மற்றும் தேவகோட்டை வட்டத்தில் கிணறுகளை அமைக்க அனுமதி கோரியுள்ளது. பல இடங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், ராமநாதபுரத்தில் திட்டத்தைத் தொடங்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வரும் ஓஎன்ஜிசி நிறுவ னத்தின் செயலுக்குத் தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
33 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago