நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு: வைகையில் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

By என்.கணேஷ்ராஜ்

ஆண்டிபட்டி: வைகை அணையின் நீர்மட்டம் 68.5 அடியாக உயர்ந்ததைத் தொடர்ந்து 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

தேனி மாவட்டத்தில் சில வாரங்களாகப் பெய்து வரும் தொடர் மழையால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கடந்த 5-ம் தேதி நீர்மட்டம் 66 அடியை (மொத்த உயரம் 71 அடி) எட்டியது. இதைத் தொடர்ந்து முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. இந்நிலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துக் கொண்டே சென்றது.

நேற்று மாலை 68.5 அடியாக உயர்ந்ததால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட கரையோர மக்களுக்கு 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து சராசரியாக விநா டிக்கு 2,796 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 69 கன அடியாகவும் உள்ளது. நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்ததும் 3-ம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படும்.

இது குறித்து நீர்வளத் துறை அதிகாரிகள் கூறுகையில், நீர் வரத்து அதிகளவில் உள்ளதால் நீர்மட்டம் இன்று (புதன்) 69 அடியாக உயர வாய்ப்புள்ளது. அணை 71 அடி உயரம் இருந்தாலும் பாதுகாப்புக் காரணங்களுக்காக 69 அடியிலேயே நீர் வெளி யேற்றப்படும். யாரும் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண் டாம் என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE