6 மணி நேரத்துக்கு பைக்குக்கு ரூ.20, காருக்கு ரூ.50 - திருச்சி பன்னடுக்கு வாகன நிறுத்துமிட கட்டணம்

By செய்திப்பிரிவு

திருச்சி: திருச்சி மேலரண் சாலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.19.70 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இந்த வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு மாநகராட்சி சார்பில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை வசூலித்துக்கொள்ள தகுதியான ஏலதாரரை தேர்வு செய்யும் நடைமுறைகள் விரைவில் தொடங்க உள்ளன. திருச்சி மேலரண் சாலையில் தமிழ்ச்சங்க கட்டிடத்துக்கு எதிரே சிட்டி கிளப் இருந்த இடத்தில் ரூ.19.70 கோடி மதிப்பில் பன்னடுக்கு வணிக வளாகத்துடன் கூடிய வாகன நிறுத்துமிடம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ளது.

இதில் தரைத்தளத்தில் 4,678 சதுர அடி பரப்பளவில் 23 கடைகள், 1,278 சதுர அடி பரப்பளவில் ஒரு உணவகம், 860 சதுர அடி பரப்பளவில் காபி ஷாப் ஆகியவை அமைய உள்ளன. இது தவிர, தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் தலா 7,780 சதுர அடி பரப்பளவில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமும், 2, 3-ம் தளங்களில் தலா 23,120 சதுர அடி பரப்பளவில் 4 சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமும் அமைக்கப்பட்டுள்ளன.

கண் கவரும் தோற்றத்தில் வடிவமைக்கட்டுள்ள இந்த வாகன நிறுத்துமிடத்தில் 150 கார்கள், 550 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில், வாகனங்கள் நிறுத்துமிடத்தை மட்டும் அதிக தொகைக்கு ஏலம் கேட்கும் தனியாரிடம் ஒப்படைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், `இந்து தமிழ் திசை' நாளிதழிடம் தெரிவித்தது: மேலரண் சாலையில் கட்டப்பட்டுள்ள பன்னடுக்கு வாகன நிறுத்துமிடத்தை ரூ.25 லட்சம் டெபாசிட் செலுத்தி, வாகனங்களுக்கு மாநகராட்சி நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தை வசூலித்துக் கொள்ள சம்மதித்து அதிக தொகைக்கு ஏலம் கேட்கும் ஏலதாரரிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளோம்.

இங்கு நிறுத்தப்படும் வாகனங்களுக்கு 6 மணி நேரம் என்ற அடிப்படையில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 6 மணி நேரத்துக்கு 4 சக்கர லகுரக வாகனங்களுக்கு ரூ.50. 2 சக்கர வாகனங்களுக்கு ரூ.20 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாதக் கட்டணத்துக்கு வாகனங்களை நிறுத்த அனுமதிப்பது குறித்து ஏலதாரர் முடிவெடுத்துக் கொள்ளலாம். தமிழக முதல்வர் இன்னும் சில நாட்களில் இந்த வளாகத்தை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைக்க உள்ளார். அதன் பிறகு மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஏல நடைமுறைகள் தொடங்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கட்டணம் மிக அதிகம்: இந்த வாகன நிறுத்துமிடத்துக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணம் மிக அதிகம் என வாகன பயன்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். திருச்சியில் தனியார் வாகன நிறுத்துமிடங்களில் நாளொன்றுக்கு ( 24 மணி நேரத்துக்கு ) 2 சக்கர வாகனங்களுக்கு வசூலிக்கப்படும் அதிகபட்ச கட்டணம் ரூ.20. இந்த பன்னடுக்கு வாகன நிறுத்துமிடத்தில் இருசக்கர வாகனங்களுக்கு 24 மணி நேரம் கணக் கிட்டால் ரூ.80 கட்டணம் செலுத்த வேண்டும். எனவே, 6 மணி நேரத்துக்கான கட்டணத்தை ( ரூ.20 ) 24 மணி நேரத்துக்கான கட்டணமாக மாநகராட்சி அறிவித்து ஏலதாரரை தேர்வு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர் மாநகர வாகன ஓட்டிகள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

5 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்