சென்னை: "சனாதன தர்மம் ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை, தனது கடமையை செய்யத் தவறி குற்றம் புரிந்துள்ளது" என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
திராவிட கருத்தியலுக்கு எதிராக "திராவிட ஒழிப்பு மாநாடு" என்ற பெயரில் கடந்த ஆகஸ்ட் மாதம் உள்ளரங்கு கூட்டம் நடத்த திட்டமிட்டு, அதற்கு அனுமதி கோரிய தமிழர் சமுதாய கூட்டமைப்பின் விண்ணப்பத்தை பூந்தமல்லி காவல் துறையினர் நிரகரித்தனர். இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்ற அச்சத்துக்காக மட்டும் கருத்து சுதந்திரத்தை தடுக்க முடியாது எனக்கூறி, மனுதாரர் அளிக்கும் புதிய விண்ணப்பத்தின் மீது அனுமதி வழங்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டது. மேலும், யாரும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை உருவாக்கக்கூடிய சூழலை ஏற்படுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தி இருந்தது.
இந்த உத்தரவின் அடிப்படையிலும், சனாதன ஒழிப்பு மாநாடு நடத்தப்பட்டதன் அடிப்படையிலும், திராவிட கொள்கைகளுக்கு எதிராக கூட்டம் நடத்த அனுமதி கேட்டு திருவேற்காட்டை சேர்ந்த மகேஷ் கார்த்திகேயன் என்பவர் மாதவரம் காவல் நிலையத்தில் மனு அளித்தார். இந்த மனுவை காவல்துறை பரிசிலீக்கவில்லை எனக்கூறி அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜெயசந்திரன் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. சனாதான ஒழிப்பு மாநாட்டில் தமிழக அமைச்சர்கள் கலந்துகொண்டு பேசியதன் விளைவாகவே தற்போது திராவிட கொள்கைக்கு எதிராக கூட்டம் நடத்த அனுமதி கேட்டு வழக்கு தொடரக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரத்தில் உள்ளவர்கள் பொது நிகழ்ச்சிகளில் பேசும்போது மக்களுக்குள் சாதி, மதம், மற்றும் கொள்கை ரீதியாக பிளவு ஏற்படாதவாறு கவனத்துடன் பேச வேண்டும். குறிப்பிட்ட கொள்கையை ஒழிக்க வேண்டும் என பேசுவதற்கு பதிலாக மது, போதைப்பொருட்கள், ஊழல், தீண்டாமை, சமூக தீமை ஆகியவற்றை ஒழிப்பது குறித்து பேசுவதில் கவனம் செலுத்தலாம்.
சனாதன தர்மம் ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்ட தமிழக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை, தனது கடமையை செய்யத் தவறி குற்றம் புரிந்துள்ளது. சனாதன ஒழிப்பு குறித்து பேசிய அமைச்சர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அரசியலமைப்பின் உணர்வைப் பாதுகாப்பதற்காக பதவிப் பிரமாணம் செய்து கொண்டவர்கள், அவர்கள் உறுதிமொழியை மீறி செயல்படுவதால், அவர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் சில குழுக்கள் மீது பொதுமக்களின் அதிருப்தி இருக்கும்.
இந்நிலையில், இந்த கூட்டத்துக்கு அனுமதி அளிப்பது பொதுமக்களிடையே நிலவும் அமைதிக்கு இடையூறு ஏற்படுத்துவதாக அமைந்துவிடும். எனவே, கூட்டத்துக்கு அனுமதி அளிப்பதன் மூலம் நீதிமன்றமும் தவறிழைக்க முடியாது எனக்கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
21 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago