சென்னை: "புதுவை மாநில சட்டப்பேரவையின் முன்னாள் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பா.கண்ணன் உடல்நலக் குறைவால் நேற்றிரவு காலமானார் என்பதையறிந்து மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்" என புதுவை முன்னாள் அமைச்சர் கண்ணன் மறைவுக்கு மருத்துவர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
புதுவை மாநில சட்டப்பேரவையின் முன்னாள் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ப.கண்ணன் உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 74. பேரவைத் தலைவர், அமைச்சர், மாநிலங்களவை எம்பி என பல்வேறு பொறுப்புகளை வகித்தார். கடந்த 1-ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக ப.கண்ணன் மூலக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்றைய தினம் அவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டு சுவாசக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு (நவ.5) அவர் இறந்தார். புதுவை வைசியாள் வீதியில் உள்ள அவரின் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்ட அவரது உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த இரங்கல் குறிப்பில், "புதுவை மாநில சட்டப்பேரவையின் முன்னாள் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பா.கண்ணன் உடல்நலக் குறைவால் நேற்றிரவு காலமானார் என்பதையறிந்து மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன். புதுவை மாநிலத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான கண்ணன், அம்மாநில சட்டப்பேரவை உறுப்பினர், சட்டப்பேரவைத் தலைவர், அமைச்சர், மாநிலங்களவை உறுப்பினர் என பல வகையான பொறுப்புகளை வகித்தவர். அமைச்சராக இருந்த காலத்தில் மாநிலம் முழுவதும் ஏராளமான புதிய அரசு வேலைகளை உருவாக்கி மக்களுக்கு வழங்கியவர். அதனால், அம்மாநில மக்களால் நேசிக்கப்பட்டவர்.
அரசியல் வேறுபாடுகளைக் கடந்து என் மீது மரியாதையும், பற்றும் கொண்டிருந்தவர். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர். புதுவையில் பல அரசியல் தலைவர்களை உருவாக்கியவர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், ஆதரவாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago