அரசுப் பள்ளிகளுக்கான மாநில கலை திருவிழா போட்டி நவ.15-ம் தேதி தொடக்கம்: வழிகாட்டுதல்களை பின்பற்றி நடத்த உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மாநில கலைத் திருவிழா போட்டிகள் நவ.15-ம் தேதி தொடங்க உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் மா.ஆர்த்தி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலை திருவிழா போட்டிகள் கடந்த செப்டம்பர் இறுதியில் தொடங்கின. இதில், பள்ளி, வட்டார, மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், மாநில அளவிலான போட்டிகள் சேலத்தில் நவ.15-ம்தேதி தொடங்கி, 18-ம் தேதி வரை நடக்க உள்ளன.

இதையடுத்து, மாவட்ட அள வில் 10 கலைகளிலும் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு தகவல் தெரிவித்து, மாநில அளவிலான போட்டிகளில் அவர்களை பங்கேற்க செய்ய வேண்டும். இதற்கான வழிகாட்டுதல்களை பின்பற்றி, போட்டிகளை சிறப்பாக நடத்தி முடிக்க தேவையான பணிகளை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வெளிநாடுகளுக்கு சுற்றுலா: மாநில அளவிலான கலை திருவிழா போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு ‘கலையரசன்’, ‘கலையரசி’ என்ற விருதுகள் வழங்கப்படும். தரவரிசையில் முதன்மை இடத்தை பெறும் 25 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்