முதல்வரின் அறிவிப்புக்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு

வேட்டிக்கு தடை விதிக்கும் கிளப்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்ட முன்வடிவு கொண்டுவரப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பை திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் வரவேற்று பேசினர்.

இதுதொடர்பாக பேரவையில் உறுப்பினர்கள் பேசியதாவது:

பேரவைத் தலைவர் ப.தனபால்:

தமிழர் பெருமை, பண்பாடு, கலாச்சாரம், நாகரிகம் போன்றவற்றை காக்க பாடுபட்டு வரும் நம் முதல்வர், இப்போது தமிழர் பண்பாட்டுக்கு ஊறு விளைவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். முதல்வரின் இந்த அறிவிப்புக்கு பேரவை உறுப்பினர்களுடன் சேர்ந்து நானும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மோகன்ராஜ் (தேமுதிக):

சேப்பாக்கம் கிரிக்கெட் கிளப்புக்கு வேட்டி அணிந்து சென்ற நீதிபதியும், மூத்த வழக்கறிஞர்களும் அவமதிக்கப்பட்டது தொடர்பாக பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதற்கு உரிய நடவடிக்கை எடுத்துள்ள முதல்வரின் அறிவிப்பை வரவேற்கிறேன்.

வேட்டி கட்டியவர்களை அவமதிக்கும் பிரச்சினை கிரிக்கெட் கிளப்பில் மட்டுமல்ல, சென்னையில் போட் கிளப், ஜிம்கானா, மெட்ராஸ் போன்ற கிளப்களிலும் உள்ளது. நீண்ட நெடுங்காலமாக இருக்கும் இந்தப் பிரச்சினைக்கு உறுப்பினர் கள் மற்றும் தமிழ் உணர்வாளர் களின் கோரிக்கையை ஏற்று அரசு நடவடிக்கை எடுத்ததை வரவேற்கிறோம்.

துரைமுருகன் (திமுக):

பாலபாரதி (மார்க்சிஸ்ட்):

தமிழர்களின் பாரம்பரிய உடை அணிவதற்கு எதிராக நடந்து கொண்டவர்கள் மீது முதல்வர் நடவடிக்கை எடுப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஏற்கிறோம். எங்கள் கோரிக்கையை ஏற்ற முதல்வருக்கு நன்றி.

ஆறுமுகம் (இந்திய கம்யூ.):

தமிழர் பண்பாடு, கலாச்சாரம், தனிப்பட்ட உரிமை ஆகியவற்றை காப்பதற்குரிய நடவடிக்கைகளை முதல்வர் எடுத்துள்ளார். அவருக்கு எங்கள் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

கோபிநாத் (காங்கிரஸ்):

பேரவையில் கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்துக்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பை வரவேற்கிறேன்.

ஜவாஹிருல்லா (மமக), செ.கு.தமிழரசன் (இந்திய குடியரசுக் கட்சி), ராமசாமி (புதிய தமிழகம்), கலையரசன் (பாமக), தனியரசு (கொங்கு இளைஞர் பேரவை), கதிரவன் (பார்வர்டு பிளாக்) ஆகியோரும் முதல்வரின் அறிவிப்பை பாராட்டிப் பேசினர்.

தமிழர் பண்பாட்டுக்கு ஊறு விளைவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். முதல்வரின் இந்த அறிவிப்புக்கு பேரவை உறுப்பினர்களுடன் சேர்ந்து நானும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE