புதுச்சேரி தொழிற்சாலை தீ விபத்து: 14 பேர் காயம்; 4 பேர் கவலைக்கிடம் - பொதுமக்கள் போராட்டம்

By அ.முன்னடியான்

புதுச்சேரி: புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் பிரபல மாத்திரை தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் இரவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கீ 14 பேர் காயம் அடைந்தள்ளனர். இதில் 4 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தனியார் தொழிற்சாலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

புதுச்சேரி அடுத்த பெரியகாலாப்பட்டு மாத்தூர் சாலையில் மாத்திரை தயாரிக்கும் பிரபல தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு புதுச்சேரி, தமிழகம் உட்பட பல மாநிலங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். தினமும் 3 ஷிப்ட் முறையில் வேலை நடந்து வருகிறது. ஒரு ஷிப்டுக்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு தொழிற்சாலையில் உள்ள பாய்லர்கள் அடுத்தடுத்து வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக, தொழிற்சாலை முழுவதும் தீ வேகமாகப் பரவியது.

தொழிற்சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி முழுவதும் கடும் புகைமூட்டம் ஏற்பட்டது. இதுகுறித்து காலாப்பட்டு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கப் போராடினர். ஆனால், முடியவில்லை. இதையடுத்து புதுச்சேரி, கோரிமேடு உள்ளிட்ட இடங்களில் இருந்து மேலும் 7 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.

அவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பல மணிநேர போராட்டத்துக்கு பிறகு இன்று அதிகாலை தீயை அணைத்தனர். இந்த விபத்தில் 14 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த காலாப்பட்டு தொகுதி பாஜக எம்எல்ஏ கல்யாணசுந்தரம், பாஜக மாநிலத் தலைவர் செல்வகணபதி எம்பி, அதிமுக மாநிலச் செயலாளர் அன்பழகன் உள்ளிட்டோர் நேரில் சென்று தீ விபத்தில் காயமடைந்தவர்களை பார்வையிட்டனர். குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

அப்போது பலத்த காயமடைந்தவர்களை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்க கல்யாணசுந்தரம் எம்எல்ஏ நடவடிக்கை எடுத்ததாகத் தெரிகிறது. அதற்கு அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் பலத்த காயமடைந்திருப்பதால் சென்னைக்கு செல்வதற்குள் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் என்ன செய்வது. இங்கேயே சிகிச்சை அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

இதனால் கோபமாக கல்யாணசுந்தரம் எம்எல்ஏ, கவலைக்கிடமான நிலையில் உள்ளவர்களை காப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்ப நடவடிக்கை எடுக்கின்றோம். இங்கு வந்து அரசியல் பேசக்கூடாது. உண்மையைத் தெரிந்து கொண்டு பேசுங்கள் என ஆவேசமாகக் கூறினர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் மேல் சிகிச்சைக்காக 11 பேர் சென்னை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து காலாப்பட்டு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தினால் அச்சமடைந்த அருகில் சுனாமி குடியிருப்பில் வசித்து வந்த மீனவர்கள் பலர் இரவோடு இரவாக தங்களது வீட்டைவிட்டு வெளியே வேறு பகுதிகளில் உள்ள உறவினர்வீடுகளுக்கு சென்றனர். பின்னர் அவர்கள் காலையில் வீடு திரும்பினர்.

இந்நிலையில் அடிக்கடி மாத்திரை தொழிற்சாலையில் ஏற்படும் விபத்தினால் ஆவேசமடைந்த அப்பகுதி பொதுமக்கள் இன்று தொழிற்சாலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து விபத்து நடைபெறும் தனியார் நிறுவனத்தை அதிகாரிகள் முறையாக சோதனையிட்டு, அனுமதியை ரத்து செய்யவேண்டும். பாதிக்கப்பட்டோருக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, திமுக அமைப்பாளரும், எதிர்கட்சித் தலைவருமான சிவா, எம்எல்ஏக்கள் செந்தில்குமார், சம்பத் உள்ளிட்டோரும் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. அசம்பாவித சம்பவங்களை தடுக்க போலீஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில் காலாப்பட்டில் இயங்கி வரும் பிரபல தனியார் மாத்திரை தயாரிப்பு தொழிற்சாலையினால் குழந்தைகள் உள்ளிட்டோருக்கு கண் எரிச்சல் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டு வருவதாகவும், இதனை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் பலரும் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டு தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்