மாலத்தீவில் சிறை வைக்கப்பட்டுள்ள 12 மீனவர்களை மீட்க ஆட்சியர், எஸ்பியிடம் தருவைக்குளம் மீனவர்கள் மனு

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி: மாலத்தீவில் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது படகையும் மீட்க வலியுறுத்தி தருவைக்குளம் மீனவர்கள் நேற்று மாவட்ட ஆட்சியர், எஸ்பியிடம் மனு அளித்தனர்.

தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளத்தைச் சேர்ந்த பாக்கியராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 12 மீனவர்கள் கடந்த மாதம் 1-ம் தேதி ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்கச் சென்றனர். அக்டோபர் 20-ம் தேதி மாலத்தீவு எல்லை அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்து வந்த மலத்தீவு கடலோர காவல் படையினர், மாலத்தீவு கடல் பகுதிக்குள் நுழைந்து மீன்பிடித்ததாக கூறி 12 மீனவர்களையும் கைது செய்து, விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் மாலத்தீவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்நிலையில் மீனவர்கள் மாலத்தீவு கடல் பகுதிக்குள் அனுமதியின்றி நுழைந்ததாகவும், தடை செய்யப்பட்ட சுறா மீன்களை பிடித்ததாகவும் கூறி மாலத்தீவு அரசு ரூ.2.27 கோடி அபராதம் விதித்துள்ளது. இதனால் சிறை வைக்கப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில் தருவைக்குளம் மீனவர்கள், பங்குத்தந்தை எஸ்.அந்தோணி மைக்கேல் வின்சென்ட் தலைமையில் நேற்று மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, எஸ்பிஎல்.பாலாஜி சரவணன் ஆகியோரை சந்தித்து மனு அளித்தனர்.

அதில் தருவைகுளத்தை சேர்ந்த பாக்கியராஜ் என்பவருக்கு சொந்தமான செவுள்வலை விசைப்படகு கடந்த அக்டோபர் 20-ம் தேதி 12 மீனவர்களுடன் மாலத்தீவு அரசால் சிறைபிடிக்கப்பட்டது. இதனால் கடந்த 2 வார காலமாக மீனவர்கள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

தற்போது மீனவரகளுக்கு ரூ.2.27 கோடி அபராதத் தொகையை மாலத்தீவு அரசு விதித்துள்ளது. கடலையே நம்பி உழைக்கும் மீனவர்களுக்கு மிகப்பெரிய தண்டனையாக இதை கருதுகிறோம். மீன்பிடித் தொழில் செய்துவந்த மீனவர்களையும், அவர்களது விசைப்படகையும் விடுவிக்க ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் விதமாக தருவைக்குளம் பொதுமக்கள் சார்பில் ஓரிரு நாளில் போராட்டங்களை அறிவிக்க இருக்கிறோம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

56 mins ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்