அருப்புக்கோட்டையில் தனியார் பேருந்து - டிராக்டர் மோதி விபத்து: 3 பேர் பலி; 37 பேர் காயம்

By இ.மணிகண்டன்

விருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டை அருகில் தனியார் பேருந்தும் டிராக்டரும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்து கவிழ்ந்து மாணவர்கள் உட்பட மூன்று பேர் பலியானார்கள். 37 பேர் காயமடைந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டை அருகில் தனியார் பேருந்தும் டிராக்டரும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் பேருந்து கவிழ்ந்தது. இதில் 3 பேர் பலியானார்கள். இறந்தவர்களில், பாலமுருகன், அருண் ஆகிய இரண்டுபேரும் காரியாபட்டி போகர் பாலிடெக்னிக்கில் படிக்கும் மாணவர்கள் என்று தெரிகிறது. மாரிச்செல்வம் (வயது 58) என்பவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார்.

இந்த விபத்தில் 37 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்த 9 பெண்கள் மற்றும் 9 ஆண்கள் மட்டும் உள்நோயாளிகளாக சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்தில்படுகாயம் அடைந்த கஸ்தூரி (வயது 68) என்பவர் ஆபத்தான நிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

56 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்