பால்வளத் துறை செயல்பாடுகள் சந்தேகத்துக்கிடமாக உள்ளது: அண்ணாமலை குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக பால்வளத் துறையின்செயல்பாடுகள் சந்தேகத்துக்கிடமாகவே இருந்து வருகிறது எனபாஜக மாநில தலைவர் அண்ணா மலை குற்றச்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

பல்வேறு குற்றச்சாட்டுகள் காரணமாக பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசர் பதவி நீக்கம்செய்யப்பட்டு, அமைச்சர் மனோ தங்கராஜ் பொறுப்பேற்றார். இவருக்கு அவரே பரவாயில்லை என்ற அளவில் பால்வளத் துறையின் நிலை தற்போது மிகவும் சீர்குலைந்து கிடக்கிறது.

பாலில் உள்ள கொழுப்புச்சத்தின் அளவைக் குறைத்து, தரத்தையும் குறைத்து, பால் பாக்கெட் நிறத்தை மட்டும் மாற்றி அதிகவிலைக்கு விற்பனை செய்வதன்மூலம் பொதுமக்கள் மீது விலைஉயர்வைச் சுமத்தியிருக்கிறார். இதனால், பொதுமக்கள் ஆவின் நிறுவன பால் வாங்குவது குறைந்து, தனியார் நிறுவனங்களின் பால் வாங்கத் தொடங்கி உள்ளனர். அரசு நிறுவனமான ஆவினை மொத்தமாக முடக்கி, தனியார் பால் நிறுவனங்களுக்கு உதவும் முயற்சியாகவே அமைச்சரின் நடவடிக்கைகள் இருக்கின்றன.

ஆவின் ஒப்பந்தத்தில் முறைகேடுகள் செய்வது, ஒப்பந்த நிறுவனங்களை மிரட்டுவது என திமுகவினர் அதிகார துஷ்பிரயோகம் செய்கின்றனர். ஒட்டுமொத்தத்தில் பால்வளத் துறையின் செயல் பாடுகள் சந்தேகத்துக்கு இட மளிக்கும் வகையில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இலங்கை பயணம்: இதற்கிடையே பாஜக தலைவர் அண்ணாமலை, அரசு விழாவில் பங்கேற்பதற்காக இலங்கை சென்றுள்ளார். இலங்கையில் தமிழர்கள் இடம்பெயர்ந்து 200 ஆண்டுகள் ஆன நிலையில், இலங்கை அரசின்நீர் வளத்துறை மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சகம் சார்பில், கொழும்புவில் இன்று (நவ.2) நடைபெறும் ‘நாம் 200 - ஒற்றுமை, பன்முகத்தன்மை மற்றும் பாரம்பரிய முழக்கம்’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அண்ணாமலை நேற்று இரவு விமானம் மூலம் இலங்கை புறப்பட்டு சென்றார். இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் கலந்து கொள்கிறார்.

கொழும்புவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, தமிழகம் திரும்பும் அண்ணாமலை,நாளை கரூரில் மீண்டும் பாத யாத்திரையை தொடங்குகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

32 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்