மெட்ரோ ரயில்களில் அக்டோபரில் 85.50 லட்சம் பேர் பயணம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், பொதுமக்களுக்கு நம்பகத்தன்மையான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து வசதியைஅளித்து வருகிறது. இதனால், நாளுக்கு நாள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அந்த வகையில், கடந்த செப்டம்பர் மாதத்தை விட அக்டோபர் மாதத்தில் 1.13 லட்சம் பேர் கூடுதலாக மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளனர். நடப்பு ஆண்டு ஜனவரி மாதத்தில் 66.07 லட்சம் பயணிகள் பயணம் செய்தனர். பின்னர், இது படிப்படியாக அதிகரித்தது. கடந்த செப்டம்பர் மாதத்தில் 84.37 லட்சம் பேர் பயணம் செய்தனர். அக்டோபர் மாதத்தில் 85.50 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.

அதிகபட்சமாக அக்.20-ம் தேதியன்று ஒரே நாளில் 3.60 லட்சம் பேர் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

5 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்