சிறுபான்மையினர் என யாரும் இல்லை: ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து

By செய்திப்பிரிவு

சென்னை: இந்தியாவில் சிறுபான்மையினர் என யாரும் இல்லை, அனைவரும் இந்தியர்கள் தான் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாள் விழா ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த பரதநாட்டிய கலைஞர் பத்மாசுப்பிரமணியம், ஆற்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலி, தென்காசி மாவட்டம் ஆய்க்குடி அமர்சேவா சங்கத்தின் நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், சங்கர்ராமன், ம.பொ.சி. பேத்தி நந்தினி உள்ளிட்டோருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவிபொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினார்.

ஆளுநர் ரவி பேசியதாவது: இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களிலும் வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமானோர் வசித்து வருகின்றனர். நம் நாட்டைப் பொருத்தவரை பெரும்பான்மை, சிறுபான்மை என யாரும் இல்லை. அனைவரும் இந்தியர்கள்தான். இந்த நாடு எனும் குடும்பத்தின் பிள்ளைகளாக நாம் உள்ளோம். நாட்டை சிறப்பாக நிர்வகிக்க ஏதுவாக மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அந்த நாளை கொண்டாடுவது மகிழ்ச்சி தருகிறது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்