நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் கும்பாபிஷேக விழா கோலாகலம்; அமைச்சர் மதிவேந்தன் உள்ளிட்டோர் பங்கேற்பு

By கி.பார்த்திபன்

நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேக நிகழ்வு இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் வனத்துறை அமைச்சர் மா. மதிவேந்தன் மற்றும் எம்பி, எம்எல்ஏக்கள், மாவட்ட ஆட்சியர் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நாமக்கல் கோட்டை சாலையில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. கோயிலில் ஒரே கல்லினால் 18 அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயர் வணங்கிய நிலையில் சாந்த சொரூபியாக பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

கடந்த 13 ஆண்டுகளுக்குப் பிறகு இக்கோயில் கும்பாபிஷேக நிகழ்வு இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலை முதல் யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து நேற்று காலை 8 மணி முதல் 12.30 மணி வரை வருண தீர்த்தம் புனிதப்படுத்ததுல், அக்னி பகவான் பூஜை, தமிழ் திவ்ய ப்ரபந்த வேள்வி, அனுதின வேள்வி ஆகிய பூஜைகள் நடைபெற்றன.

தொடர்ந்து 10.45 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதலும், மாலை பிம்ப வாஸ்து, மஹா சாந்தி வேள்வியை நிறைவு செய்தல், ஒன்பது கலச திருமஞ்சனம், கங்கணம் கட்டுதல் உள்ளிட்ட நடைபெற்றன. இதையடுத்து இன்று காலை 7.15 மணிக்கு வருண தீர்த்தம், புனிதபடுத்துதல் அனுதின ஹோமம், தமிழ் திவ்ய பிரபந்த வேள்வியும், காலை 9.10 மணிக்கு யாத்ராதானம், கும்பப்ராயணம் பூஜையும் நடைபெற்றது.

காலை 10 மணிக்கு கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது. உள்ளது. இதில் வனத்துறை அமைச்சர் மா. மதிவேந்தன் மற்றும் எம்பி, எம்எல்ஏக்கள், மாவட்ட ஆட்சியர் உள்படஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE