சென்னை: மின் கட்டணம் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று வரும் போலி குறுஞ்செய்திகளை நுகர்வோர் நம்பி ஏமாற வேண்டாம் என்று மின் வாரியம் எச்சரித்துள்ளது. மின் நுகர்வோரின் செல்போன் எண்களுக்கு மின் வாரியத்தில் இருந்து அனுப்புவது போன்று போலியான குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு வருகின்றன.
இதைக் காணும் நுகர்வோர் அந்தக் குறுஞ்செய்தியில் உள்ள லிங்க்-ல் சென்று பார்க்கும்போது, அவர்களது வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை மர்ம நபர்கள் பறித்துக் கொள்கின்றனர். இது தொடர்பாக, மின் வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், மின் கட்டணம் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என நுகர்வோரின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்தால் பதற்றம் அடைய வேண்டாம். உங்களுடைய மின் கட்டண ரசீதின் தற்போதைய நிலை குறித்து மின் வாரியத்தின் இணையதள பக்கத்தில் சென்று சரி பார்க்க வேண்டும்.
குறுஞ்செய்தியில் உள்ள எண்ணைத் தொடர்பு கொள்ள வேண்டாம். அதில் உள்ள லிங்க்-ஐ கிளிக் செய்ய வேண்டாம். மேலும், இதுகுறித்து 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார் அளிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
» ஈரோட்டின் பெருமைகளை உலகறியச் செய்ய வேண்டும்: ‘ரெனாகான்’ ஏஏசி பிளாக் நிறுவன தலைவர் எதிர்பார்ப்பு
» நீட் தேர்வால் மகனின் டாக்டர் கனவு பறிபோகும் என்பதால் வீசினேன்: ரவுடி கருக்கா வினோத் வாக்குமூலம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago