சென்னை: சென்னை எழும்பூர்-விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள பரங்கிமலை ரயில்வே யார்டில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் சில ரயில்களின் சேவை 3 நாட்களுக்கு பகுதியாகவும், சில ரயில் சேவைகள் முழுவதுமாகவும் ரத்து செய்யப்பட்டுகின்றன.
இதன்படி, சென்னை எழும்பூர்- மன்னார்குடி விரைவு ரயில் (வண்டி எண்.16179), சென்னை எழும்பூர் - மங்களூரு விரைவு ரயில் (16159), சென்னை எழும்பூர்- திருச்சி விரைவு ரயில் 12653) ஆகிய ரயில்கள் இன்று (1-ம் தேதி) முதல் 3-ம் தேதி வரை 3 நாட்களுக்கு எழும்பூர்-தாம்பரம் இடையே ரத்து செய்யப்படுகிறது.
சென்னை எழும்பூர்- சேலம் அதிவிரைவு ரயில் (22153) இன்று முதல் 3 நாட்களுக்கு சென்னை கடற்கரை, வண்ணாரப்பேட்டை, வியாசர்பாடி, அரக்கோணம் வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும். எனவே, இந்த ரயில் திருமால்பூர், செங்கல்பட்டு ரயில் நிலையங்களில் நிற்காது.
புறநகர் ரயில் சேவைகள் ரத்து: சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே இரவு 10.20, 11.05, 11.30, 11.59 மணி, சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே இரவு 10.40, தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே இரவு 10.40, 11.20, 11.40 செங்கல்பட்டு-சென்னை கடற்கரை இடையே இரவு 10.10 மணிக்கு இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில் சேவைகள் இன்று முதல் 3-ம் தேதி வரை முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது.
» ஈரோட்டின் பெருமைகளை உலகறியச் செய்ய வேண்டும்: ‘ரெனாகான்’ ஏஏசி பிளாக் நிறுவன தலைவர் எதிர்பார்ப்பு
» நீட் தேர்வால் மகனின் டாக்டர் கனவு பறிபோகும் என்பதால் வீசினேன்: ரவுடி கருக்கா வினோத் வாக்குமூலம்
மேலும், செங்கல்பட்டு-சென்னை கடற்கரை இடையே இரவு 11 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் சேவை இன்று முதல் 3 நாட்களுக்கு தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே சென்னை மண்டலம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago