நீலகிரி மாவட்டம் முழுவதும் இஎஸ்ஐ திட்டம் அமல்: மண்டல துணை இயக்குநர் தகவல்

By செய்திப்பிரிவு

கோவை: நீலகிரி மாவட்டம் முழுவதும் இன்று (நவ.1) முதல் இஎஸ்ஐ திட்டம் அமலாவதாக கோவை இஎஸ்ஐசி சார் மண்டல அலுவலகத்தின் துணை இயக்குநர் (பொறுப்பு) கே.ஆர்.ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: காப்பீடு செய்யப்பட்ட நபர்கள், அவர்களைச் சார்ந்தோருக்கு மருத்துவப் பயன்கள் மற்றும் நோய் கால பயன், பேறுகால உதவி, தற்காலிக அல்லது நிரந்தர ஊன பயன், சார்ந்தோர் உதவி பயன்கள் வழங்குவதே இஎஸ்ஐ திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

பத்து அல்லது அதற்கும் மேற்பட்ட நபர்களை பணியில் அமர்த்தும் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள், உணவகங்கள், உணவு விடுதிகள், திரையரங்குகள், செய்தி நிறுவனங்கள், கடைகள், தனியார் கல்விக் கூடங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றுக்கு இத்திட்டம் பொருந்தும். மாதம் ரூ.21 ஆயிரம் வரை ஊதியம் (மிகை நேர ஊதியம் நீங்கலாக) பெறும் தொழிலாளர்கள், இஎஸ்ஐ சட்டப்படி சமூக பாதுகாப்பு பயன்கள் பெற உரிமை உள்ளவர்கள் ஆவர்.

இஎஸ்ஐ திட்டத்திற்கு, தொழிலாளர்களின் ஊதியத்தில் தொழிலதிபர்கள் 3.25 சதவீதமும், தொழிலாளர்கள் 0.75 சதவீதமும் பங்களிப்பு தொகையாக செலுத்த வேண்டும்.

இந்நிலையில், மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் கடந்த 13-ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, நீலகிரி மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளும் நவ.1 முதல் இஎஸ்ஐ திட்டத்தின் கீழ் வருகிறது. அதன்படி, பத்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களை கொண்ட நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகள், நிறுவனங்கள் இன்று முதல் இத்திட்டத்தின் கீழ் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். அதோடு, மாதம் ரூ.21 ஆயிரம் வரை ஊதியம் பெறும் தொழிலாளர்களை காபீட்டாளர்களாக சேர்க்க வேண்டும். இதுதொடர்பான உதவிக்கு, 'கிளை மேலாளர், இ.எஸ்.ஐ. கார்ப்பரேஷன், 261-கே-10, பேங்க் லேன், உதகை-643001’ என்ற முகவரியிலோ அல்லது 0423-2447933 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். மேலும், கோவையில் உள்ள இஎஸ்ஐ சார் மண்டல அலுவலகத்தை 0422-2362329 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இத்திட்டம் குறித்த கூடுதல் விவரங்களை https://shramsuvidha.gov.in/, https://www.esic.in/, https://www.esic.gov.in ஆகிய இணையதளங்களில் தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்