சண்டை போட வேண்டியதில்லை; தமிழகத்தில் ஆளுநரும், முதல்வரும் பேசி தீர்வு காணலாம் - தமிழிசை யோசனை

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரி ராஜ்நிவாஸ் சாலையில் தடுப்புகள் இல்லாததால் பெட்ரோல் குண்டு போட்டுவிடாதீர்கள். சும்மா சண்டையே போடவேண்டியதில்லை. தமிழகத்தில் முதல்வரும், ஆளுநரும் உட்காந்து பேசி தீர்வு காணலாம் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களின் உதயநாள் விழா இன்று நடைபெற்றது. அதைத்தொடர்ந்து துணைநிலை ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களிடம் கூறியதாவது: "அனைத்து மாநில நாட்களையும் ராஜ்நிவாஸில் கொண்டாடும்போது தேச ஒற்றுமை ஏற்படும். பல மொழி பேசினாலும், பல மாநிலமாக இருந்தாலும் கலாசாரத்தால் ஒன்றிணைந்துள்ளோம்.

யாராலும் பாதுகாப்பற்ற நிலை எனக்கு வராது. புதுச்சேரியில் பதவியேற்றவுடன் மூன்று அடுக்கு பாதுகாப்பு இருந்தது. அனைத்தையும் எடுக்கக்கூறினேன். மத்திய பாதுகாப்பு படை சென்றது. ஒரடுக்கு பாதுகாப்பு மட்டும் இருந்தது. போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடு என்றனர். பாதுகாப்பற்ற நிலை இங்கு இல்லை. பாதுகாப்பு அதிகாரிகள் அதை பார்த்துக் கொள்வார்கள்.

இது பொதுமக்களுக்கான சாலை. அதனால்தான் திறந்துள்ளோம். எதிர்க்கட்சி சகோதரர்கள் பாதுகாப்பு தடுப்புகளை எடுக்கக்கூறிவிட்டு, உங்களால் எந்த ஆர்ப்பாட்டமும் இங்கு நடக்கக்கூடாது என்பதை கோரிக்கையாக வைக்கிறேன். பிரச்சினை என்றால் நேரில் வந்து பேசுங்கள். ஆரோக்கியமான சூழல் வேண்டும். ராஜ்நிவாஸ் சாலையில் தடுப்புகள் இல்லாததால் பெட்ரோல் குண்டு போட்டுவிடாதீர்கள்.
தெலங்கானாவில் மசோதாவுக்கு கையெழுத்து போடாததால் நீதிமன்றம் சென்றார்கள்.

இது அந்தந்த மாநில பிரச்சினை. தமிழக மசோதாவை அந்த ஆளுநர் எதிர்கொள்கிறார் என்பது இரு அமைப்புகளுக்கான பிரச்சினை. அதில் கருத்து சொல்ல விரும்பவில்லை. புதுச்சேரியில் அதிகாரிகள், எம்எல்ஏக்கள், பேரவைத்தலைவர், முதல்வர், அமைச்சர்கள், ஆளுநர் இந்த இணைப்பு சரியாக இருக்கவேண்டும். எங்கு குறை இருந்தாலும் சரி செய்யலாம். அதிகாரிகளால் முதல்வருக்கும் எனக்கும் சங்கடங்கள் இருக்கலாம். அது சரிசெய்யப்பட்டு மாநிலத்தில் மக்கள் பலன் அடைய வேண்டும்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவத்தில் பத்து சதவிகித இடஒதுக்கீட்டுக்கு மத்திய அரசு விரைவாக ஒப்புதல் தந்தது. மருத்துவ சேர்க்கைக்கு செப்டம்பர் முதல் வாரத்தில் அனுமதி கிடைத்தது. மருத்துவ சேர்க்கையில் அதிகாரிகள் தவறு செய்தார்கள். புதுச்சேரியில் காலம் தாழ்ந்து செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு பிறகு அனுமதிக்கப்பட்டவர்கள் பாதிக்கக்கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தெலங்கானாவில் கோரிக்கை வைத்துள்ளேன்.

மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாக உள்துறை அமைச்சகம், பிரதமர் அலுவலகம் உறுதி தந்துள்ளனர்.

சென்டாக் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். கடும் முயற்சி எடுத்துள்ளோம். உச்ச நீதிமன்றம் வரையறை தந்துள்ள சூழலிலும், மத்திய அரசு போராடி பெற்று தருவதாக உறுதி மொழி தந்துள்ளனர். காலம் தாழ்ந்து மருத்துவத்தில் அனுமதிக்கப்பட்ட புதுச்சேரி மாணவர்கள் கவலைப்பட வேண்டாம். உதவி செய்யப்படும். அதிகாரிகள் தவறு இழைத்தனர் என்பதில் மாற்று கருத்து இல்லை. தவறு செய்திருக்கக்கூடாது. நடவடிக்கை எடுக்கப்படும்.

அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆகியோருடன் அதிகாரிகளுக்கு சில கருத்து வேற்றுமைகள் இருக்கலாம். அதை களைந்து ஒற்றுமையுடன் செயல்படவேண்டும். தலைமைச்செயலரை அழைத்து பேசினேன். முதல்வரிடமும் பேசியுள்ளேன். அதிகாரிகள் தாமதம் செய்வது கவலை அளிக்கக்கூடியதாக இருந்தது. முதல்வர், அமைச்சர்களை கலந்து ஆலோசித்து சுமூக செயல்முறையாற்ற நடவடிக்கை எடுத்துள்ளேன்.

தமிழகத்திலும் முதல்வரும், ஆளுநரும் உட்காந்து பேசி தீர்வு காணலாம். சும்மா சண்டையே போட வேண்டியதில்லை. தெலங்கானாவிலும் இதையே சொல்கிறேன். கருத்து வேறுபாடுகளோடு இருக்கும்போது பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாது. கருத்து ஒற்றுமை தேவை. அது புதுச்சேரியில் இருக்கவேண்டும். அது இருப்பதுபோல் நான் பார்த்து கொள்வேன். தீவிரவாதத்துக்கு எங்கேயும் இடம் கிடையாது” என்று குறிப்பிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

50 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்