ராமநாதபுரம்: பசும்பொன்னில் நேற்று நடைபெற்ற முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், சமுதாய அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
முத்துராமலிங்கத் தேவரின் 116-வது ஜெயந்தி விழா மற்றும் 61-வது குருபூஜை விழா ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நேற்றுநடைபெற்றது. தேவர் சிலைக்கு அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கே.ஆர்.பெரியகருப்பன், ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், கீதா ஜீவன், அன்பில் மகேஸ், டி.ஆர்.பி.ராஜா, ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி, எம்எல்ஏ.க்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம் (ராமநாதபுரம்), செ.முருகேசன் (பரமக்குடி) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கட்சித் தலைவர்கள்: தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மரியாதை செலுத்தினார். அவருடன் அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், அன்வர் ராஜா, ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, விஜயபாஸ்கர், காமராஜ், கோகுல இந்திரா, ராஜேந்திர பாலாஜி, மணிகண்டன், செந்தில்நாதன் எம்எல்ஏ, ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் முனியசாமி உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
» ஜஸ்பிரீத் பும்ராவை போன்று பாக். வீரர்கள் ஏன் பந்து வீசுவது இல்லை: விளக்குகிறார் வாசிம் அக்ரம்
கோவா முதல்வர்: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், சட்டப்பேரவை பாஜக குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், மாவட்டத் தலைவர் தரணி முருகேசன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
மதுரை ஆதீனம் ஸ்ரீஞானசம்பந்த தேசிக சுவாமிகள், ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தர்மர் எம்.பி, முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
மேலும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பூமிநாதன் எம்எல்ஏ (மதுரை தெற்கு), மாவட்டச் செயலாளர் வி.கே.சுரேஷ், காங்கிரஸ் சார்பில் திருநாவுக்கரசர் எம்.பி., ராமச்சந்திரன் எம்எல்ஏ, தேமுதிக பொருளாளர் பிரேமலதா ஆகியோரும்,சசிகலா தனது ஆதரவாளர்களுடனும், அமமுக பொதுச் செயலாளர்டிடிவி.தினகரன் தனது கட்சியினருடனும் வந்து தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
அதேபோல், பாமக தலைவர் அன்புமணி, கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து, அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன், முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ், மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார், அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட அரசியல் கட்சியினர், சமுதாய அமைப்புகளின் தலைவர்களும் மரியாதை செலுத்தினர்.
தேவர் குருபூஜையையொட்டி அவரது நினைவிடம் அமைந்துள்ள பசும்பொன் உட்பட்ட ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
12 ஆயிரம் போலீஸார்: தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் தலைமையில் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண், தென் மண்டல ஐஜி நரேந்திரன் நாயர் உட்பட 5 டிஐஜிக்கள், 25 எஸ்பிக்கள் மற்றும் 12,000 போலீஸார் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கமுதியிலிருந்து பசும்பொன்வரை 100 சிசிடிவி கேமராக்கள்பொருத்தப்பட்டு கண்காணிக்கப் பட்டது. தேவர் நினைவிடம் அமைந்துள்ள பசும்பொன்னில் ட்ரோன்கேமராக்கள் மூலம் கண்காணிக் கப்பட்டது. மாவட்டம் முழுவதும் 37 சோதனைச் சாவடிகளை அமைத்து, தீவிர வாகன சோதனை யில் போலீஸார் ஈடுபட்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
56 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago