ஆண்டிபட்டி: வனத் துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தொழிலாளி யின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள குள்ளப்ப கவுண்டன்பட்டியைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளி ஈஸ்வரன் (55). இவர் கடந்த சனிக்கிழமை இரவு வனத்துறையினரை அரிவாளால் தாக்க முயன்றதாகக் கூறி, வனத் துறையினர் அவரை துப்பாக்கியால் சுட்டதில் ஈஸ்வரன் உயிரிழந்தார்.
தோட்டத்தில் காவல் பணிக்குச் சென்றவரை வனத் துறையினர் கொன்று விட்டதாக கூறி அவரது உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நேற்று முன்தினம் கம்பம் அரசு மருத்துவமனை, தேனி ஆட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன் அமர்ந்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இறந்தவரின் உடலையும் வாங்க மறுத்ததால் தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட வனத்துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்தவரின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இப்போராட்டம் நேற்று மாலை வரை நீடித்தது.
ஆண்டிபட்டி சட்டப்பேரவை உறுப்பினர் மகாராஜன் பேச்சுவார்த்தை நடத்தினார். உரிய விசாரணை நடத்தி வனத் துறையினர் மீது நடவடிக்கை எடுப்பதாகவும், இறந்தவரின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்குவதுடன் அவரது குடும்பத்தி னருக்கு அரசு வேலை வாங்கி தருவதாகவும் உறுதியளித்தார். இதைத் தொடர்ந்து உறவினர்கள் போராட்டத்தைக் கைவிட்டு ஈஸ்வரனின் உடலைப் பெற்றுக் கொண்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
21 mins ago
தமிழகம்
25 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago