சென்னை: தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் காவல் உதவி கண்காணிப்பாளராக இருந்த அய்மான் ஜமால் காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று ஆவடி சட்டம் - ஒழுங்கு துணை ஆணையராகவும், கோவை மாவட்டம் பொள்ளாச்சி காவல் உதவி கண்காணிப்பாளராக இருந்த எஸ்.பிருந்தா காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று சேலம் வடக்கு துணை ஆணையராகவும் நியமிக்கப்படுகின்றனர்.
மேலும், சேலம் வடக்கு காவல் துணை ஆணையராக இருந்த கவுதம் கோயல், தாம்பரம் காவல் ஆணையரகத்துக்குட்பட்ட பள்ளிக் கரணை சட்டம் - ஒழுங்கு துணை ஆணையராகவும், ஆவடி சட்டம்-ஒழுங்கு துணை ஆணையர் என்.பாஸ்கரன் தமிழ்நாடு சிறப்புகாவல் பட்டாலியன் (மதுரை) கமாண்டன்ட்டாகவும் மாற்றப்படுகின்றனர்.
இதேபோல், கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த சுகுணா சிங், ரயில்வே காவல் கண்காணிப்பாளராக பதவி ஏற்பார். இதற்கான உத்தரவை தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலாளர் அமுதா பிறப்பித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
22 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago