4 சதவீத அகவிலைப்படி உயர்வு - அரசு ஊழியர், ஆசிரியர்கள் முதல்வரை சந்தித்து நன்றி

By செய்திப்பிரிவு

சென்னை: அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையை பரிசீலித்து, மத்திய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும்போதெல்லாம் தமிழக அரசும் அரசு அலுவலர் மற்றும்ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு செயல்படுத்தப்படும் என்று ஏற்கெனவே அறிவித்துள்ளது.

அந்த அறிவிப்பை தொடர்ந்து, தற்போது 42 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் 46 சதவீதமாக உயர்த்தி வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 25-ம் தேதி உத்தரவிட்டார். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நான்கு சதவீத அகவிலைப்படியை உயர்த்தி வழங்கியதற்காக பல்வேறு அரசு அலுவலர்கள் சங்கங்கள், அரசு பணியாளர்கள் சங்கங்கள், ஓட்டுநர் சங்கங்கள், தொழிலாளர்கள் சங்கங்கள், போக்குவரத்து கழக சங்கங்கள், செவிலியர்சங்கம் மற்றும் பல்வேறு ஆசிரியர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் தலைமைச் செயலகத்தில் நேற்றுமுதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE