விதிகளை மீறியதாக ஸ்ரீதர் வாண்டையார் மீது வழக்கு

By செய்திப்பிரிவு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் மருது சகோதரர்கள் குருபூஜையில் விதிகளை மீறியதாக மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்ரீ தர் வாண்டையார் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

காளையார்கோவிலில் நேற்று முன்தினம் மருது சகோதரர்கள் குருபூஜை நடைபெற்றது. இதற்காக சிவகங்கை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மருது சகோதரர்கள் நினைவிடத்தில் மரியாதை செலுத்த மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்ரீ தர் வாண்டையார் தலைமையில் வந்த சிலர், வாகனங்களின் மேற்கூரையில் அமர்ந்தும்,தொங்கியபடியும் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக போலீஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக காவல் உதவிஆய்வாளர் குகன் அளித்த புகாரின்பேரில், கட்சித் தலைவர் தர் வாண்டையார் உள்ளிட்டோர் மீது காவல் ஆய்வாளர் கணேசமூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

44 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்