சாதிவாரி கணக்கெடுப்பை தொடர்ந்து நடத்தி இருந்தால் 100 சதவீத இட ஒதுக்கீடு தொடர்ந்திருக்கும்: பாமக கருத்தரங்கில் ராமதாஸ் பேச்சு

By செய்திப்பிரிவு

சென்னை: பாமக சார்பில் ‘சமூக நீதி காக்க சாதிவாரி கணக்கெடுப்பு’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் கட்சியின் தலைவர் அன்புமணி தலைமையில் சென்னை தி.நகரில் நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பங்கேற்றுப் பேசியதாவது:

சுதந்திரத்துக்கு முன்பு 1931-ம் ஆண்டு வரை 6 முறை தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, மத்திய, மாநில அரசுப் பணிகளில் 100 சதவீதம் இட ஒதுக்கீடு அமலில் இருந்தது. பின் 2-ம் உலகப் போரால் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. சுதந்திரம் கிடைத்த 6-வது நாளிலேயே 100 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது.

சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்ந்திருந்தால் தமிழகத்தில் 100 சதவீத இட ஒதுக்கீடும் தொடர்ந்திருக்கும். இப்போது தமிழகத்தில் வழங்கப்படும் 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து வந்துள்ளது. அதைத் தக்கவைக்க சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, தரவுகளை அரசு கையில் வைத்திருக்க வேண்டும். இதற்காக 44 ஆண்டுகளுக்கு முன்பு திண்டிவனத்தில் நான்தான் குரல் கொடுத்தேன். 44 ஆண்டுகளாகத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். தமிழகத்தில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் செயல்படுத்த முன்வரவில்லை. நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் காலம் வெகு தொலைவில் இல்லை. அதை யாராலும் தடுக்க முடியாது. விரைவில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஆணையிட வலியுறுத்துவேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

பாமக தலைவர் அன்புமணி பேசும்போது, “சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு நடத்த முடியாது என 1948-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு சட்டத்தை முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டு, பிரதமருக்குக் கடிதம் எழுதுகிறார். ஆனால் கடந்த 2008-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட புள்ளிவிவர சேகரிப்பு சட்டப்படி சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசே நடத்தலாம். எனவே முதல்வர் ஸ்டாலினை ராமதாஸ் நேரில் சந்தித்து தெளிவுபடுத்த வேண்டும்” என்றார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் சுதர்சன நாச்சியப்பன் பேசும்போது, “உயர் வகுப்பினர் நிர்வாகிகளாக இருக்கும் நிறுவனங்களின் ரூ.25 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்யும் மத்திய அரசு, ஏழை, எளிய மக்களின் உயர்வுக்கு சாரிவாரி கணக்கெடுப்பை நடத்த மறுக்கிறது. இக்கணக்கெடுப்பை நடத்த மாநில அரசுகளுக்குச் சிந்தனை வந்திருப்பது வரவேற்கத்தக்கது” என்றார்.

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசோக் வரதன் ஷெட்டி பேசும்போது, “மத்திய அரசு செயலர், மத்திய அரசு உயர் பணியிடங்களில் உயர் வகுப்பினரே அதிக எண்ணிக்கையில் உள்ளனர். நீதித் துறையிலாவது சமூக நீதி இருந்தால்தான் ஏழை எளிய மக்கள் பயன்பெறுவார்கள்” என்றார்.

முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞர் மாசிலாமணி பேசும்போது, “சாதிவாரி கணக்கெடுப்பு சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு அவசியம். கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது” என்றார்.

இக்கருத்தரங்கில் கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, சமூக நீதி பேரவைத் தலைவர் பாலு, வன்னியர் சங்கத் தலைவர் பு.த.அருள்மொழி, முன்னாள் மத்திய இணையமைச்சர் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்