சென்னை: ஆயுத பூஜை தொடர் விடுமுறை நேற்று முன்தினம் முடிந்த நிலையில், சொந்த ஊர் சென்ற லட்சக்கணக்கானோர் ஒரே நேரத்தில் திரும்பியதால் நேற்று காலை சென்னையின் எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.
ஆயுத பூஜை தொடர் விடுமுறையை ஒட்டி கடந்த வெள்ளி, சனிமற்றும் ஞாயிறு (அக். 20, 21, 22)ஆகிய நாட்களில் லட்சக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்குச் சென்றனர். அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் இயக்கப்பட்ட 8,003 பேருந்துகள் மூலம் 4.80 லட்சம் பேர் சென்னையிலிருந்து பயணமாகினர்.
இதேபோல் ஆம்னி பேருந்துகளில் மட்டும் சுமார் 1.50 லட்சம் பேர் பயணித்திருந்தனர். இந்த விடுமுறை நேற்றுடன் முடிவுக்கு வந்ததையடுத்து நேற்று முன்தினம் மாலை முதலே வெளியூர் சென்றவர்கள் சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு திரும்பத் தொடங்கினர்.
இதனால் சென்னையின் புறநகர்பகுதிகளான தாம்பரம், பெருங்களத்தூரில் நேற்று முன்தினம் மாலையே போக்குவரத்து நெரிசல்காணப்பட்டது. மேலும், தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பிலும் சென்னைக்கு தினசரிஇயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் 1,213 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 3,313 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டது. இதில்பயணிகளின் தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்கப்பட்டன.
» இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் தீவிரமடைந்தால் அமெரிக்கர்களை வெளியேற்றுவது குறித்து ஆய்வு
» பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ரூ.22,300 கோடி உர மானியத்துக்கு ஒப்புதல்
இதேபோல் ஆம்னி பேருந்துகளிலும் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்திருந்தனர். சொந்த ஊருக்கு சென்றவர்கள் ஒரே நேரத்தில் சென்னை திரும்பியதால் தாம்பரம், பெருங்களத்தூர் பகுதிகளில் நேற்று காலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நேரம் செல்லச் செல்ல பேருந்துகள் மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்தன. இதனால் வாகனங்கள் அந்த இடத்தைவிட்டு நகர முடியாமல் திணறின. சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை, தாம்பரம் ஜிஎஸ்டி சாலைமுழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
இதையடுத்து வாகன நெரிசலைக் கட்டுப்படுத்த அரசு விரைவுப் பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகள் அனைத்தும் வண்டலூரிலிருந்து வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்ட சாலை வழியாககோயம்பேட்டுக்கு திருப்பி விடப்பட்டன. இந்த பேருந்துகள் பூந்தமல்லி சென்று அங்கிருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்துக்குச் சென்றன.
மேலும் வண்டலூரிலிருந்தும் போதிய மாநகர பேருந்துகள் இயக்கப்படவில்லை என குற்றம்சாட்டிய தாம்பரம், பல்லாவரம் போன்ற பகுதிகளைச் சேர்ந்த பயணிகள், வாடகை வாகனங்களில் அதிக கட்டணத்தில் செல்ல நேரிட்டதாக வருத்தம் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago