சென்னை: மாநகராட்சி சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பூங்கா மற்றும் விளையாட்டு திடல், புனர மைக்கப்பட்ட குளங்களை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார்.
சென்னை மாநகராட்சி சார்பில் 199-வது வார்டில் பாலாஜி நகரில் ரூ.67 லட்சத்து 47 ஆயிரத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பூங்கா,194-வது வார்டில் ரூ.1 கோடியில்புனரமைக்கப்பட்ட வண்ணன்கேணி, தாச்சன் கேணி குளங்கள், 196-வது வார்டு, கண்ணகி நகரில் ரூ.87 லட்சத்து 14 ஆயிரத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விளையாட்டுத் திடல் ஆகியவற்றை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு நேற்று திறந்துவைத்தார். இத்திட்டங்களுக்கான நிதி சிங்கார சென்னை 2.0 திட்ட நிதியில் இருந்து ஒதுக்கப்பட்டது.
தொடர்ந்து, 193-வது வார்டுக்கு உட்பட்ட துரைப்பாக்கம் பகுதிஆனந்தா நகர் மற்றும் வினாயகாபிரதான சாலையில் பல்வேறு திட்டநிதிகளின்கீழ் ரூ.58 கோடியே 25லட்சத்தில் 512 சாலைகள் அமைக்கும் பணிகளையும் தொடங்கி வைத்தார். சோழிங்கநல்லூர் மண்டலம், 200-வது வார்டுக்கு உட்பட்ட செம்மஞ்சேரியில் ரூ.1 கோடியே 45 லட்சத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நவீன எரிவாயு தகன மேடையையும் பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சிகளில், மேயர் ஆர்.பிரியா, தென்சென்னை எம்.பிதமிழச்சி தங்கபாண்டியன், சோழிங்கநல்லூர் எம்எல்ஏ எஸ்.அரவிந்த் ரமேஷ், துணை மேயர் மு.மகேஷ் குமார், தெற்கு வட்டார துணை ஆணையர் எம்.பி.அமித் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
» இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் தீவிரமடைந்தால் அமெரிக்கர்களை வெளியேற்றுவது குறித்து ஆய்வு
» பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ரூ.22,300 கோடி உர மானியத்துக்கு ஒப்புதல்
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago